'என்னைத் தண்டித்தது போதும்' - மரியா ஷரபோவா உருக்கம்!

முன்னணி டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா, கடந்த ஆண்டு மெல்டோனியம் என்ற ஊக்கமருந்தைப் பயன்படுத்திய புகாரில் சிக்கி, டென்னிஸ் விளையாட இரண்டு ஆண்டுகள் தடைசெய்யப்பட்டார். தவறை ஒப்புக்கொண்டதால், அவரது தடைக்காலம் பின்னர் 15 மாதங்களாகக் குறைக்கப்பட்டது. அவரது தடைக்காலம் முடிந்து, வரும் 26-ம் தேதி ஜெர்மனியில் நடைபெற உள்ள  'Porsche Grand Prix' போட்டியில் கலந்துகொண்டு விளையாடப்போகிறார்.

மரியா ஷரபோவா

ஐந்து முறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற ஷரபோவா, 'Porsche Grand Prix' தொடரில் வைல்டு கார்டுமூலம் தகுதிப் போட்டிகளில் கலந்துகொள்ளாமல், நேரடியாகக் கலந்துகொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனை, டென்னிஸ் பிரபலங்கள் பலரும் விமர்சித்தனர்.

இந்த நிலையில், 'நான் எனது தண்டனையை அனுபவித்துக்கொண்டிருக்கிறேன். என்னை மேலும் மேலும் தண்டிப்பதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா? வீரர்கள் என்னைத் தொடர்ந்து விமர்சித்தால், அது சரியாக இருக்காது' எனப் பதில் அளித்துள்ளார். மேலும், மெல்டோனியம் ஊக்கமருந்து தடை குறித்து, சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் என்னிடம் நேரடியாக எச்சரித்திருக்கலாம் எனவும் ஷரபோவா விமர்சித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!