Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அடுத்த சீசன் ஆடப்போற சி.எஸ்.கேல இதெல்லாம் இருக்குமா? #CSKRewind

ஐ.பி.எல் தொடங்கி ஒரு வாரமாகியும் சுரத்தே இல்லாமல் இருந்த நம் ஊர் கிரிக்கெட் ரசிகர்கள் இப்போதுதான் குஷி மோடிற்கு வந்திருக்கிறார்கள். காரணம், பி.சி.சி.ஐ அடுத்த ஆண்டு ஐ.பி.எல்லில் கலந்துகொள்ள சென்னை அணிக்கு விடுத்துள்ள அறிவிப்பு. சென்னை அணியின் உரிமையாளர் 'அடுத்த சீசனிலும் கேப்டன் தோனிதான்' என அறிவிக்க, ரசிகர்களுக்கு டபுள் ஆம்லேட் சாப்பிட்ட திருப்தி. சரி, ஒரு பெரிய பிரேக்கிற்குப் பிறகு சென்னை அணி ஆட வருகிறது. ஆனால் முன்பு இருந்த சில விஷயங்கள் அடுத்த ஆண்டும் இருக்குமா? ரசிகர்கள் பழையபடி விசில் போடுவார்களா என்பது பற்றிய பதிவுதான் இது.

கிரிக்கெட்

'கேப்டன்' தோனி :

ஐ.பி.எல் வரலாற்றிலேயே முதன்முறையாக இன்னொரு கேப்டனின் கீழ் களமிறங்கி விளையாடி வருகிறார் தோனி. இதற்கே சென்னை ரசிகர்கள் ரத்தக்கண்ணீர் வடித்தார்கள். கூடுதல் சோகமாக ஃபார்ம் அவுட் வேறு. நான்கு ஆட்டங்களையும் சேர்த்தே 30 ரன்களைத் தாண்டவில்லை. இந்நிலையில்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான அழைப்பு. தோனிதான் மீண்டும் கேப்டன் என்றால் திரும்பவும் சேப்பாக்கம் அதிரத்தான் போகிறது. ஆனால் இத்தனை நாட்கள் இடைவேளைக்குப் பின் அதே பழைய சென்னை சிங்கமாய், கூல் கேப்டனாய் அவர் ஜொலிப்பாரா என்பதுதான் கேள்வி.

சீனியர் வீரர்கள் :

சென்னை அணியின் ஆஸ்தான ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஹஸ்ஸி, பிக்பேஷ் தொடருக்குப் பின் விளையாடுவதில்லை. அதிரடிக்கும் ரன் வேட்டைக்காரர்கள் ஸ்மித், மெக்கல்லம் இருவரும் அடுத்த ஆண்டு 35 வயதைத் தொட்டுவிடுவார்கள். ஓய்வு முடிவை எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கலாம். தோனியும் அப்படியே. ஒருவேளை இந்த சீனியர் பிளேயர்கள் இல்லையென்றால் சென்னை அணி பழைய ஆவேசத்தோடு பந்தை பறக்கவிடுமா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. 

ராசி ரசாயனம் :

எவ்வளவு இக்கட்டான நிலைமையில் இருந்தாலும், 'வந்துட்டேன்னு சொல்லு' என மாஸாக எகிறி அடித்து செமி ஃபைனலில் நுழையும் ஒரே அணி சென்னைதான். ஃபேர்ப்ளே அவார்டும் பெரும்பாலும் சென்னைக்குத்தான். இத்தனைக்கும் காரணம், வீரர்களுக்கு இடையேயான கெமிஸ்ட்ரி. சென்னை அணி ட்ரஸ்ஸிங் ரூமில் அவ்வளவு நெருக்கம் இருக்கும். ஆனால், கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிக்கு வந்தால் பக்கத்தில் இருக்கும் நண்பனிடம் செட்டாகவே சிலமணி நேரங்களாகும். இரண்டு ஆண்டுகள் பிரேக்கிற்குப் பின் வரும் வீரர்கள் அதே கெமிஸ்ட்ரியோடு விளையாடுவார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

லோக்கல் பாய்ஸ் :

இந்தியக் கிரிக்கெட் அணியில் அஸ்வின், விஜய் தவிர மற்ற வீரர்களுக்கு இடம் கிடைப்பதில்லை. அதனால் சி.எஸ்.கேதான் அவர்களுக்கான ஏணியாக இருந்தது. விஜய் சங்கர், பாபா அபராஜித், பத்ரிநாத், அபினவ் முகுந்த், யோ மகேஷ் என எக்கச்சக்க வீரர்களை லைம்லைட்டிற்கு அழைத்து வந்தது சி.எஸ்.கே அணிதான். இப்போதைய தொடரில் சிதறிக் கிடக்கும் தமிழக வீரர்கள் அடுத்த ஆண்டு சென்னை அணிக்காக களம் இறங்கினால் 'நம் ஊர் பசங்க கலக்குறாங்கப்பா' என கெத்தாய் காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளலாம்.

தெறிக்க விடும் பவுலர்கள் :

சென்னை அணி பேட்டிங்கிற்குப் பெயர்போனதுதான். ஆனால் இக்கட்டான நேரங்களில் பவுலர்கள்தான் அதிகம் கைகொடுத்திருக்கிறார்கள். சீசனுக்கு ஒரு சென்னை அணி பவுலர், எதிரணிகளை டரியலாக்குவார். நெஹ்ரா, மோகித் சர்மா, சுதீப் தியாகி, ஹில்ஃப்னாஸ், பொலிங்கர், அல்பி மார்க்கெல், டிம் சவுதி என இந்த லிஸ்ட் மிகவும் பெரியது. இப்படியான பவுலர்கள் அடுத்த சீசனில் சென்னைக்கு மீண்டும் கிடைத்தால் 'தெறிக்கவிடலாமா?' எனக் கேட்டு கேட்டு பேட்ஸ்மேன்களை அவுட்டாக்கலாம்.

தரை லோக்கல் எனர்ஜி :

மற்ற அணிகளின் ரசிகர்களுக்கும் பிடித்தது சென்னை மைதானத்தில் நிலவும் கொண்டாட்ட மனநிலைதான். ஒரு பக்கம் சிவமணி ட்ரம்ஸ் அதிரடிக்க, மறுபக்கம் டப்பாங்குத்து காதைக் கிழிக்க, சென்னை நகரத்திற்கே சேப்பாக்கத்தில் இருந்துதான் எனர்ஜி சப்ளையாகும். போதாக்குறைக்கு பிராவோ, ஜடேஜா போன்ற ஜாலி கேலி வீரர்களும் தங்கள் பங்குக்குப் போட்டுத் தாக்குவார்கள். கிட்டத்தட்ட ஆயிரம் நாட்கள் கழித்து ஓர் அணியாய் திரளும் ரசிகர்களுக்கும் வீரர்களுக்கும் இடையே அதே பழைய எனர்ஜியும் இருந்தால்... வேறென்ன ஃபைனலில் விசில் போடவேண்டியதுதான்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close