Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஐபிஎல்: டெல்லியிடம் பணிந்தது பஞ்சாப்

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 15-வது லீக் போட்டியில் பஞ்சாப், டெல்லி அணிகள் மோதின. டெல்லி அணி முதலில் பேட் செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் குவித்தது. அந்த அணியின் சாம் பில்லிங்ஸ் 55, ஆண்டர்சன் 39 ரன்கள் எடுத்தனர். பஞ்சாப் அணியின் வருண் ஆரோன் இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

Delhi wins


இதையடுத்து, களமிறங்கிய பஞ்சாப் அணி தொடக்கம் முதலே சொதப்பி வந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் வோரா 3, ஆம்லா 19 ரன்களில் பெவிலியன் திரும்பினர். பின் களமிறங்கிய வீரர்களும் சோபிக்கவில்லை. குறிப்பாக, அந்த அணியின் கேப்டன் மேக்ஸ்வெல் டக் அவுட் ஆனார்.


அந்த அணியின் அக்‌சர் பட்டேல் மட்டும் சற்று நிலைத்து ஆடினார். அவரும் 44 ரன்களில் வெளியேற, பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 51 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி பெற்றது. டெல்லி அணியின்  மோரீஸ் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.  


நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் அணிக்கு இது இரண்டாவது தோல்வி ஆகும். அதேநேரத்தில்,  மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணிக்கு, இது இரண்டாவது வெற்றி ஆகும். புள்ளிப் பட்டியலில் கொல்கத்தா முதல் இடத்தில் உள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close