ரொனால்டோ ஹாட்ரிக் கோல்! அரை இறுதியில் ரியல் மாட்ரிட் | Ronaldo's hatrick makes real madrid to reach semis

வெளியிடப்பட்ட நேரம்: 15:19 (19/04/2017)

கடைசி தொடர்பு:15:15 (19/04/2017)

ரொனால்டோ ஹாட்ரிக் கோல்! அரை இறுதியில் ரியல் மாட்ரிட்

சாம்பியன்ஸ் லீக் கால்பந்துப் போட்டியின் கால்இறுதியில், பேயர்ன் முனிச் அணியை வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்துள்ளது, ரியல் மாட்ரிட் அணி.

ronaldo

வெவ்வேறு லீக் போட்டிகளில் வென்ற அணிகளைத் தேர்வுசெய்து, சாம்பியன்ஸ் லீக் கோப்பைப் போட்டிகள் நடத்தப்பட்டுவருகின்றன. தகுதிச் சுற்றுகள் முடிந்துள்ள நிலையில், கால்இறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட் அணியும் பேயர்ன் முனிச் அணியும் மோதின. முதல் கால்இறுதிப் போட்டியில்  2-1 என்ற கணக்கில் ரியல் மாட்ரிட் வென்றதால், இந்தப் போட்டியில் பேயர்ன் அணி கூடுதலாக இரண்டு கோல்கள் அடிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனிடையே, நள்ளிரவு நடந்த போட்டியில் இரு அணிகளும் மோதின.

முதல் பாதியில் இரு அணியும் கோல் போடாமல் ஆட, இரண்டாவது பாதியில் லவன்டோஸ்க்கி பேயர்ன் அணியின் கோல் கணக்கை துவக்கிவைத்தார். இதற்குப் பதிலடியாக, நட்சத்திர வீரர் ரொனால்டோ ஒரு கோல் அடித்து சமன்செய்ய, அடுத்த சில நிமிடங்களில் ரியல் மாட்ரிட் வீரர் ராமோஸ் ஓன் கோல் போட்டுக் கொடுத்தார். 2-1 என பேயர்ன் முன்னிலையில் இருந்தபோதும், முந்தைய போட்டியின் கோல் காரணமாக, கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.

 இதையடுத்து விளையாடிய ரியல் மாட்ரிட் தரப்பில், ரொனால்டோ மேலும் இரண்டு கோல்களை அடித்தார். ரியல் மாட்ரிட் வீரர் அசன்சியோவும் ஒரு கோல் அடித்தார். இறுதியில், ரியல் மாட்ரிட் அணி 4-2 என்ற கோல் கணக்கில் பேயர்ன் முனிச் அணியை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. இக்கட்டான ஆட்டத்திலும் ஹாட்ரிக் கோல்கள் அடித்து அசத்தியுள்ளார், கிறிஸ்டியானோ ரொனால்டோ.  


[X] Close

[X] Close