வெளியிடப்பட்ட நேரம்: 22:03 (19/04/2017)

கடைசி தொடர்பு:09:10 (20/04/2017)

டெல்லி அணிக்கு 192 ரன்கள் டார்கெட் நிர்ணயித்தது ஹைதராபாத்


ஐபிஎல் தொடரில், ஹைதராபாத்தில் இன்று நடைபெறும் 21-வது போட்டியில், டேவிட் வார்னரின் ஹைதராபாத், ஜாகீர்கானின் டெல்லி அணிகள் மோதிவருகின்றன.


டாஸ் வென்ற ஹைதராபாத் அணி, முதலில் பேட் செய்தது. கேப்டன் வார்னர் 4 ரன்களில் வெளியேற, தவானும் வில்லியம்சனும் நிலைத்து நின்று ஆடினர். வில்லியம்சன் 51 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தவான், 50 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 20 ஓவர்களின் முடிவில் அந்த அணி, நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது.


டெல்லி அணியின் க்ரிஸ் மோரிஸ் நான்கு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இதைத்தொடர்ந்து, 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்க உள்ளது.


இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ள ஹைதராபாத் அணி, மூன்று வெற்றிகளையும் நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணி, இரண்டு வெற்றிகளையும் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.