Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பஞ்சாப் அதிரடி.. ஆம்லா சதம்.. மும்பை அணிக்கு 199 ரன்கள் டார்கெட்!

ஐபிஎல் தொடரில் இந்தூரில் இன்று நடந்து வரும் போட்டியில் பஞ்சாப், மும்பை அணிகள் மோதி வருகின்றன.  டாஸ் வென்ற மும்பை பௌலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, பஞ்சாப் அணி முதலில் பேட் செய்தது.

Amla


அந்த அணி ஆரம்பம் முதலே அடித்து ஆடியது. குறிப்பாக, துவக்க ஆட்டக்காரர் ஹசீம் ஆம்லா அதிரடியாக ஆடி சதம் அடித்தார். இதனால் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்தது. ஆம்லா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 104 ரன்கள் எடுத்திருந்தார். அதிரடியாக ஆடிய, அந்த அணியின் கேப்டன் மேக்ஸ்வெல் 18 பந்துகளில் 40 ரன்கள் குவித்தார்.

மும்பை அணியின் மிச்செல் இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதையடுத்து 199 ரன்கள் எடுத்தால், வெற்றி என்ற கடினமான இலக்குடன், மும்பை அணி களமிறங்க உள்ளது. 


இதுவரை ஐந்துப் போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் அணி, இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. மும்பை அணி ஐந்து போட்டிகளில் விளையாடி, அதில் நான்கில் வெற்றி பெற்றுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement