காளி முதல் மகாபலி ஷேரா வரை.. WWE-ல் கலக்கும் இந்திய சிங்கங்கள்!

`ஜட்டிதான் போட்ருப்பாய்ங்க. ஆனால், சம்பந்தமேயில்லாமல் பெல்ட்டுக்கு அடிச்சுக்கிட்டுக் கிடப்பாய்ங்க' என WWE பற்றி ஊருக்குள் ஒரு பேச்சு உண்டு. வாஸ்தவம்தான், என்ன பண்றது... என்டர்டெயின்மென்ட் ஆவுதுல்ல. பொதுவாகவே அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களுமே ஆதிக்கம் செலுத்துகின்ற இது போன்ற தொழில்முறை மல்யுத்தப் போட்டிகளில், ஆச்சரியமாக இந்தியர்கள் சிலரும் கலந்துகொண்டு கலக்கியிருக்கிறார்கள். அவர்களைப் பற்றிப் பார்ப்போமா...

 

தி கிரேட் காளி :

WWE வீரர் தி கிரேட் காளி

இந்திய மல்யுத்த வீரர்களிலேயே  கிரேட் காளி தான் செம பிரபலம். 7 அடி உயரம், 157 கிலோகிராம் எடை எனப் பார்க்கவே படுபயங்கரமாக இருப்பார். இப்படி வகைதொகை இல்லாமல் வளர்ந்து நிற்பதற்குக் காரணம் வல்லாரை லேகியத்தை வளைச்சு வளைச்சு சாப்பிட்டது இல்லை... `ஆக்ரோமெகாலி' எனும் விசித்திர வியாதி. தி கிரேட் காளி APW என்ற நிறுவனத்திற்காக மல்யுத்தம் செய்துகொண்டிருந்தபோது பிரயன் ஓங் எனும் வீரரை ஒரே அடியில் கொன்று விட்டார். (யம்மாடீ..!) பின்னர், 2006 ஆம் ஆண்டு WWE போட்டிகளில் தனது பெரிய்ய்ய வலது காலை எடுத்துவைத்த கிரேட் காளி, முதல் வேலையாக அண்டர்டேக்கரிடம் தான் ஒரண்டையிழுத்தார். தொடர்ந்து சில ஆண்டுகள் அங்கே டெரர் பீஸாக வலம் வந்துகொண்டிருந்தவரை, திடீரென காமெடி ரூட்டுக்கு மாற்றிவிட்டார்கள். அதன்பிறகு அங்கிருந்து கிளம்பி நடிப்புத்துறைக்குச் சென்றவர் 4 ஹாலிவுட் படங்கள், 2 பாலிவுட் படங்கள், கை நிறைய தொலைக்காட்சித் தொடர்கள் என பிஸியாக இருக்கிறார்.

 

ஜிந்தர் மஹால் :

ஜிந்தர் மஹால்

ஜிந்தர் மஹால், பார்க்கவும் திருமலைநாயக்கர் மஹால் தூண் போல படா சைஸில் தான் இருப்பார். ஜிந்தர் மஹால் மல்யுத்தம் கற்றுக்கொண்டது அவரது உறவினர் கடோவிர் சிங்கிடம். அவரும் ஒரு காலத்தில் காமா சிங் என்ற பெயரில் மல்யுத்த அரங்கை அதிரவைத்தவர். WWE வில் இணைந்த புதிதில் ஜிந்தர் மஹால் அடிவாங்காத ஏரியாவே கிடையாது. பின்னர், `3 எம்பி' என்ற பெயரில் மூவரணி ஒன்று ஆரம்பித்து மற்றவர்களையும் அடித்துவந்தார். ஆனால், ஜிந்தர் மஹால் வாழ்க்கையிலேயே சமீபத்தில் நடந்த அந்த சம்பவம் தான் சிறப்பான சம்பவம். WWE சாம்பியன் ரேன்டி ஆர்டனையே எதிர்த்து சண்டையிடத் தேர்வாகியிருக்கிறார் ஜிந்தர். கலக்குங்க ப்ரோ...

 

ரித்தேஷ் :

ரித்தேஷ்

35 வயதான ரித்தேஷ் இது வரை WON, UNA, Wrestle clash, BWI, NBW, ANW, என எல்லா இடத்திலும் மல்லுக்கட்டி இருக்கும் ரித்தேஷ் தற்போது TNA-வில் மல்லுக்கட்டியிருக்கிறார். ஏராளமான சாம்பியன்ஷிப்களை வென்றிருக்கும் ரித்தேஷ், அடிக்கடி தனது பெயரையும் விதவிதமாக மாற்றிக் கொள்வார். மான்ஸ்டர் ஜே, ஸ்க்வாக் தத், சமோசா மான்ஸ்டர் ( சமோசாவா? ) இதெல்லாம் ரித்தேஷுடைய பெயர்கள் தான். தற்பொழுது ரித்தேஷுடைய பெயர் சஞ்சய் தத்.

 

பாலிவுட் பாய்ஸ் :

பாலிவுட் பாய்ஸ்

`பாலிவுட் பாய்ஸ்' என அழைக்கப்படும் `தி சிங் பிரதர்ஸ்' நிஜமாகவே சகோதரர்கள். ECCW, GFW, RKK என பல இடங்களில் மல்யுத்தம் போட்டிருக்கும் இவர்கள் சமீபத்தில் தான் WWE வில் என்ட்ரி ஆனார்கள். ஜிந்தர் மஹால் செய்த அந்த சம்பவம் சிறப்பான சம்பவமாக மாற பாலிவுட் பாய்ஸ் தான் காரணம்.

 

மகாபலி ஷேரா :

மகாபலி ஷேரா

இருபத்து ஆறே வயதே ஆன இளம் மல்யுத்த வீரர். TNA நிறுவனம் நடத்திய `ரிங் கா கிங்' தொடரில் உலக ஹெவி வெயிட் சாம்பியன்ஷிப் வென்ற திறமைசாலி. தற்போது TNA நிறுவனத்தில் மல்யுத்தம் செய்து வரும் மஹாபலி ஷேராவை "இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட மல்யுத்த வீரர்களிலேயே மிகவும் திறமையானவர்" என ரெஸ்ட்லிங் விமர்சகர்கள் பாராட்டி குவிக்கின்றனர். வாழ்த்துக்கள் பாஸ்...

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!