குட்டி டி வில்லியர்ஸ் களமிறங்கியாச்சு! | ABD's son joins practise and chants 'Go RCB'

வெளியிடப்பட்ட நேரம்: 16:41 (22/04/2017)

கடைசி தொடர்பு:16:41 (22/04/2017)

குட்டி டி வில்லியர்ஸ் களமிறங்கியாச்சு!

தென் ஆப்பிரிக்காவின் அதிரடி ஆட்டக்காரர் டி வில்லியர்ஸின் மகனான 3 வயது ஆபிரகாம் இப்போதே தனது பயிற்சியை ஆரம்பித்துவிட்டார். தந்தையுடன் அவர் பயிற்சி செய்யும் வீடியோ தான் இப்போது ஆன்லைன் வைரல்.

abd

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் டி வில்லியர்ஸ் அதிரடி ஆட்டத்துக்கு பெயர் போனவர். மைதானத்தின் நாலாபுறங்களிலும் ரன் குவிப்பவதால் அவர் Mr.360 என்று அழைக்கப்படுவார். தற்போது ஐபிஎல் தொடரில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வரும் இவர் தனது மூன்று வயது மகனுடன் பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

டி வில்லியர்ஸின் மகன் ஆபிரகாம், தந்தையுடன் இணைந்து பயிற்சி செய்வதோடு நில்லாமல், சிறிய பேட்டை பிடித்துக் கொண்டு டி வில்லியர்ஸ் போல அதிரடி ஆட்டத்தை ஆடுகிறார். மேலும், இப்போதே டி வில்லியர்ஸுடன் சேர்ந்துக் கொண்டு 'கோ ஆர்.சி.பி' என லூட்டி அடித்து வருகிறார். விராத் கோலியின் பேட்டிங் பயிற்சியையும் ஒய்யாரமாய் சாய்ந்துக் கொண்டு வேடிக்கை பார்த்து வருகிறார் குட்டி டி வில்லியர்ஸ்.