வெளியிடப்பட்ட நேரம்: 19:38 (23/04/2017)

கடைசி தொடர்பு:19:37 (23/04/2017)

போராடி தோற்றது குஜராத்.. பஞ்சாப் அணிக்கு மூன்றாவது வெற்றி #GLvKXIP

ஐபிஎல் 10-வது சீசனில் இன்று ராஜ்கோட்டில் முதலில் நடந்த போட்டியில், பஞ்சாப், குஜராத் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பௌலிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து, பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் வோரா 2 ரன்னில் வெளியேற, மற்றொரு துவக்க ஆட்டக்காரர் ஹாசிம் அம்லா நிதானமாக ஆடி அரைசதம் அடித்தார்.

Punjab


அவர் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல் 18 பந்துகளில் 31 ரன்களும், அக்சர் பட்டேல் 17 பந்துகளில் 34 ரன்களும் அடித்து அதிரடி காட்டினர். இதன் மூலம் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. குஜராத் அணி சார்பில் ஆண்ட்ரோ டை இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.


இதன் மூலம் 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இழக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. குஜராத் அணி தரப்பில் ரெய்னா, தினேஷ் கார்த்திக் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். ரெய்னா 32 ரன்கள் அடித்து வெளியேறினார். மறு முனையில் நிதானமாக ஆடிய தினேஷ் கார்த்திக் அரை சதம் அடித்தார்.


20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி ஏழு விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 26 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி பெற்றது. கார்த்திக் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 58 ரன்கள் எடுத்திருந்தார். பஞ்சாப் அணியின் சந்தீப் மற்றும் கரியப்பா தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.


ஏழுப் போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் அணிக்கு இது மூன்றாவது வெற்றியாகும். அதேநேரத்தில், ஏழுப் போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் அணிக்கு இது ஐந்தாவது தோல்வியாகும்.   இந்த வெற்றி மூலம் பஞ்சாப் அணி, புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.