வெளியிடப்பட்ட நேரம்: 21:47 (24/04/2017)

கடைசி தொடர்பு:21:52 (24/04/2017)

#IPL10: மும்பை இந்தியன்ஸுக்கு 161 ரன்கள் இலக்கு

இன்று ஐபிஎல் தொடரின் 28-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய புனே அணி 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் குவித்துள்ளது.

இன்று வான்கடே மைதானத்தில் நடக்கும் போட்டியில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் சந்திக்கின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து விளையாடிய புனே அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 160 ரன்கள் குவித்துள்ளது.

புனே அணியில் அதிகபட்சமாக ரஹானே 38 ரன்களும், ராகுல் திரிபாதி 45 ரன்களும் குவித்தனர். போன ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய தோனி 7 ரன்களே குவித்தார். மும்பை இந்தியன்ஸ் தரப்பில் பும்ரா, கரன் ஷர்மா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். ஜான்ஸன், ஹர்பஜன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். ஐபிஎல் போட்டிகளில் ஹர்பஜன் எடுக்கும் 200-வது விக்கெட் இதுவாகும். இதையடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்குகிறது மும்பை இந்தியன்ஸ் அணி. 12 புள்ளிகளுடன் மும்பை முதலிடத்திலும், 6 புள்ளிகளுடன் புனே 5-வது இடத்திலும் உள்ளது. சச்சினுக்கு பிறந்தநாள் பரிசாக வெற்றியை பரிசளிக்கும் முனைப்பில் களமிறங்குகிறது மும்பை இந்தியன்ஸ்.

Photo Courtesy : IPLT20