வெளியிடப்பட்ட நேரம்: 23:53 (25/04/2017)

கடைசி தொடர்பு:08:40 (26/04/2017)

ஐபிஎல்: பெங்களூரு - ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி, மழையால் ரத்து!

ஐபிஎல் தொடரில், பெங்களூரு - ஹைதராபாத் இடையேயான போட்டியில், ஒரு பந்துகூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டுள்ளது.

kohli

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான 29-வது லீக் போட்டி, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருந்தது. விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ளக் காத்திருந்தன. இந்த ஐபிஎல் சீசனின் தொடக்க ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸை தோற்கடித்து, வெற்றிக் கணக்கைத் தொடங்கியிருந்தது நடப்பு சாம்பியனான சன் ரைசர்ஸ் ஹைதராபாத். இதனால், இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்ற முனைப்பில் களம் காணக் காத்திருந்தது, கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் அணி. 

ஆனால், ஆட்டம் தொடங்குவதற்கு முன்பிருந்தே மழை பெய்துகொண்டிருந்தது. இதனால், டாஸ்கூட போடமுடியாத நிலை ஏற்பட்டது. ஒருகட்டத்தில், ஆட்டத்தைக் கைவிட முடிவுசெய்யப்பட்டது. பின்னர், ஒரு பந்துகூட வீசப்படாத நிலையில், பெங்களூரு - ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி ரத்துசெய்யப்பட்டது. இதனால், இரு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு புள்ளி வழங்கப்பட்டது. பட்டியலில் 9 புள்ளிகளுடன் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மூன்றாவது இடத்திலும், 5 புள்ளிகளுடன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆறாவது இடத்திலும் உள்ளன.