ஊக்கமருந்து சர்ச்சை: சுப்ரதா பாலுக்கு நான்கு வருட தடை?!

இந்திய கால்பந்து அணியின் கோல்கீப்பர் சுப்ரதா பால், ஊக்கமருந்து சோதனையில் சிக்கியது நாடு முழுவதும் விளையாட்டு ரசிகர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

subrata paul

இந்திய கால்பந்து அணியின் கோல் கீப்பராக விளையாடிவருபவர், கொல்கத்தாவைச் சேர்ந்த சுப்ரதா பால். தனது அபாரமான ஆட்டத்திறனால், அதிகபட்ச கால்பந்து ரசிகர்களைத் தன்வசம் வைத்திருப்பவர் இவர். 2016-ம் ஆண்டில் சிறந்த வீரருக்கான அர்ஜூனா விருதும் பெற்றார். நம்பிக்கை நட்சத்திரமாக வலம்வந்த சுப்ரதா பால், ‘டெர்புடாலின்’ என்னும் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தைப் பயன்படுத்தியது தெரியவந்தது. 

'பாசிட்டிவ்' என முடிவு வந்ததால், பெரும் சர்ச்சையில் சிக்கி அகில இந்திய கால்பந்து சங்கத்தால் இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில், அவருக்கு நான்கு வருடம் தடை விதிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இல்லையெனில், 'பி' சோதனையில் தன்னை அவர் நிரூபிக்க வேண்டும். இதுதொடர்பாகப் பேசியுள்ள சுப்ரதா பால், 'ஊடகங்கள்மூலமாக இந்தச் செய்தியை அறிந்தபோது மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். நான் நிரபராதி. நேர்மையாக நாட்டுக்காக விளையாடிவருகிறேன். விரைவில் என்னை நிரூபிப்பேன்', என்று கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!