Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பஞ்சாபை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்தது சன் ரைசர்ஸ் ஹைதராபாத். பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்.

33  வது ஐபிஎல் போட்டி இன்று இரவு  பஞ்சாபில் உள்ள மொகாலியில் நடந்தது.  கிங்ஸ் லெவன் பஞ்சாப்  மற்றும் சன்  ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று மோதின. டாஸ் வென்ற மேக்ஸ்வெல் சேஸிங்கை தேர்ந்தெடுத்தார். பஞ்சாப் அணியில் இன்று   நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.  ஆம்லா, நடராஜன், சந்தீப் ஷர்மா, ஸ்டோனிஸ் ஆகியோருக்கு பதிலாக மார்ட்டின் கப்தில், இஷாந்த் ஷர்மா, அனுரீத் சிங், இயான் மோர்கன் அணியில் இடம்பெற்றார்கள். ஹைதராபாத் அணியில் யுவராஜ் மீண்டும் வந்ததால், பிபுல் ஷர்மா நீக்கப்பட்டார். 

ஹைதராபாத் அணி கேப்டன் வார்னர்

டேவிட் வார்னரும், ஷிகர் தவானும் ஆரம்பத்தில் இருந்தே அடித்து ஆடினார்கள். குறிப்பாக தவான் தொடர்ச்சியாக பவுண்டரி விளாசினார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 107 ரன்கள் குவித்தது. வார்னர் 51 ரன்னிலும், தவான் 77 ரன்னிலும் அவுட் ஆயினர். இறுதிக்கட்ட ஓவர்களில் கேன் வில்லியம்சன் அதிரடித்தார். அவரின் விளாசலால் 20 ஓவர்கள் முடிவில் 207 ரன்கள் குவித்தது ஹைதராபாத். சற்றே கடினமான இலக்கை சேஸிங் செய்ய களமிறங்கியது பஞ்சாப். 

குப்தில் 23 ரன்னிலும், வோஹ்ரா 3 ரன்னிலும், மேக்ஸ்வெல்  ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆயினர். இதனால் 42/3  என அணி தத்தளித்தது. அதன் பின்னர்  ஷான் மார்ஷ் வாண வேடிக்கை காட்ட ஆரம்பித்தார். அவருக்கு பக்கபலமாக இயான் மோர்கன் ஆடினார்.

இந்த இருவரும் ஆடியவிதத்தை பார்க்கும் போது, மேட்ச் பஞ்சாப் பக்கம் திரும்பும் என்றே எல்லோருக்கும் தோன்றியது. ஆனால் ரஷீத் கான் இந்த மேட்சில் மேஜிக் ஓவர்களை வீசினார். முதல் பத்து ஓவர்களில் இரண்டு ஓவர்கள் அவர் வீசினார். அதில் தலா ஒரு ரன்னை மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் டார்கெட் ரன்ரேட் எகிறியது. 

ரன்ரேட் உயர்த்துவதற்காக ஷாட் ஆட  முயற்சிக்க, ரஷீத் கான் பந்தில் வீழ்ந்தார் மோர்கன். இதையடுத்து ஷான் மார்ஸும் 84  ரன்களில் அவுட் ஆனார்.  அவர் புவனேஷ்வர்  குமார் பந்துவீச்சில் தீபக் ஹுதாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதையடுத்து வந்த அக்சர் படேல் 9 பந்துகளில் 16 ரன்களோடு திருப்திப்பட்டுக் கொண்டார். சித்தார்த் கவுல் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். பேட்டிங்க்கு சாதகமான ஆடுகளத்தில் நான்கு ஓவர்கள் வீசி வெறும் 27 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து குப்தில், ஷான் மார்ஷ் என இரண்டு பெரிய விக்கெட்டுகளை வீழ்த்தினார் புவனேஷ்வர் குமார். 

20 ஓவர்கள் முடிவில், 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் மட்டுமே எடுத்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப். இதையடுத்து  26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது ஹைதராபாத். இந்த வெற்றியின் மூலம் ஹைதராபாத்தின் பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. 

கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு இது எட்டாவது போட்டியாகும். இந்த போட்டியில் தோற்றதன் மூலம் அடுத்து வரும் ஆறு போட்டிகளில் குறைந்தது ஐந்து போட்டியாவது ஜெயிக்கவேண்டும் என்ற சூழல் உருவாகியுள்ளது.  முந்தைய சீசனை  விட இந்த முறை பஞ்சாப் நன்றாகவே ஆடுகிறது. ஆனால் பேட்டிங்கிலும் சரி, பவுலிங்கிலும் சரி கடைசி நான்கு ஓவர்களில் சொதப்பல் ஆட்டம் ஆடுவதால், வெற்றியை எட்டமுடியாமல் போய்விடுகிறது. பஞ்சாபின் இந்த தோல்வியால் குஜராத், பெங்களூரு, புனே, டெல்லி அணிகளின்  பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பு சிறிய சதவீத அளவில் அதிகரித்திருக்கிறது. எட்டு போட்டிகளில் ஆடியும் இன்னமும் பஞ்சாபால் சிறந்த லெவனை தேர்ந்தெடுக்க முடியவில்லை. இந்த நிலை தொடர்ந்தால் மேக்ஸ்வெல் அணி லீக் சுற்றோடு திரும்ப வேண்டியதுதான். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement