வெளியிடப்பட்ட நேரம்: 12:41 (29/04/2017)

கடைசி தொடர்பு:13:26 (29/04/2017)

ஃபார்முலா E பந்தயக் கார் ஓட்டிய முதல் இந்தியப் பெண்!

பார்சிலோனாவில் நடந்த கார்ப் பந்தயத்தில்ஃபார்முலா E  பந்தயக் காரினை ஓட்டிய முதல் இந்தியப் பெண் என்ற பெருமையினைப் பெறுகிறார் குல் பனாங்.

முதல் கார் ரேஸ் பெண்


கார்கள்மீது குறிப்பாக ரேஸ் கார்கள்மீது தீராக் காதல் கொண்ட குல் பனாங் ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா நகரில் நடந்த ’மஹிந்திரா ஃபார்முலா E  கார்ப் பந்தயம்’ போட்டியில் பங்கேற்று M4 எலக்ட்ரோ பந்தயக் காரில் போட்டியில் கலந்துகொண்டார். இம்மாதிரியான பந்தயக் காரினை ஓட்டும் முதல் இந்தியப் பெண் இவர்.

பாலிவுட் திரைப்பட நாயகி, தொழிலதிபர், மோட்டார் காதலர் எனப் பன்முகத் திறமை கொண்டவர் குல் பனாங். ஹிந்தியில் ‘டார்’ திரைப்படத்தில் முன்னணிக் கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்தவர் குல் பனாங். ’அப் தக் சப்பான் 2’ திரைப்படத்திலும் இவர் நாயகியாக நடித்துள்ளார். பந்தயக் கார்கள் ஓட்டுவதென்றால் அதற்கு சிறப்பு உடற்தகுதி மிகவும் அவசியம். இந்தக் கார்ப் பந்தயத்தில் பங்கேற்பதற்காகவே குல் பனாங் சிறப்புப் பயிற்றுநர் மூலம் உணவு, உடற்பயிற்சி, பந்தயப் பயிற்சி எனப் பல கட்டமாகப் பயிற்சி எடுத்த பின்னரே பங்கேற்றுள்ளார்.