வெளியிடப்பட்ட நேரம்: 17:56 (29/04/2017)

கடைசி தொடர்பு:18:05 (29/04/2017)

பெங்களூரு அணிக்கு 157 ரன் வெற்றி இலக்கு நிர்ணயித்தது புனே!

ஐபிஎல் தொடரின் 34-வது போட்டியில் இன்று, புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்  ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. முதலில் ஆடிய புனே அணி, 3 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் குவித்துள்ளது.

pune

34-வது ஐபிஎல் போட்டி இன்று புனேவில் நடைபெறுகிறது. புனே-பெங்களூரு அணிகள் மோதும் இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற பெங்களூரு அணி, பந்துவீச்சைத் தேர்வுசெய்தது. இதையடுத்து, விளையாடிய புனே அணி, 20 ஓவர்களின் முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் குவித்துள்ளன.

புனே அணியில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 45 ரன்களும், மனோஜ் திவாரி 44 ரன்களும் குவித்தனர். இறுதியில் களமிறங்கிய தோனி, ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி விளாசி, 21 ரன்கள் குவித்தார். பெங்களூரு அணியின் சாமுவேல் பத்ரி, பவன் நெகி, பின்னி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்குகிறது பெங்களூரு அணி.  தற்போது,           8 புள்ளிகளுடன் புனே 4-வது இடத்திலும், 5 புள்ளிகளுடன் பெங்களூரு 7-வது இடத்திலும் இருக்கிறது.