வெளியிடப்பட்ட நேரம்: 20:06 (29/04/2017)

கடைசி தொடர்பு:20:06 (29/04/2017)

#IPL10: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு படுதோல்வி!

இன்று, ஐபிஎல் தொடரின் 34-வது போட்டியில், புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. இதில் 61 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு படுதோல்வி அடைந்துள்ளது.

vk

34-வது ஐபிஎல் போட்டி இன்று புனேவில் நடைபெற்றது. புனே- பெங்களூர் அணிகள் மோதும் இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற பெங்களூரு அணி, பந்துவீச்சைத் தேர்வுசெய்தது. இதையடுத்து விளையாடிய புனே அணி, 20 ஓவர்களின் முடிவில், 3 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் குவித்தது. புனே அணியில் அதிகபட்சமாக, ஸ்டீவ் ஸ்மித் 45 ரன்களும், மனோஜ் திவாரி 44 ரன்களும் குவித்தனர்.

இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி, 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 96 ரன்களே குவித்தது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக, கோலி 47 பந்துகளில் 54 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கு ரன்களே குவித்தனர். புனே அணியின் இம்ரான் தாஹிர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஃபெர்குசன் 2 விக்கெட்டுகளும் உனத்கட், கிரிஸ்டியன், வாஷிங்டன் சுந்தர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர். இதையடுத்து 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது புனே சூப்பர் ஜெயன்ட்ஸ். தற்போது, புனே அணி 10 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் பெங்களூர் அணி 5 புள்ளிகளுடன் 7-வது இடத்திலும் உள்ளது. இதனிடையே தகுதிச் சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை இழக்கும் நிலை, பெங்களூருக்கு ஏற்பட்டுள்ளது. 

இரவு 8 மணிக்கு ராஜ்கோட்டில் நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் குஜராத் லயன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற குஜராத் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 

Photo Courtesy : IPLT20