வெளியிடப்பட்ட நேரம்: 00:41 (30/04/2017)

கடைசி தொடர்பு:00:36 (30/04/2017)

பரபரப்பான சூப்பர் ஓவரில் சிங்கத்தை வீழ்த்தியது மும்பை...!

ஐ.பி.எல்லில் இன்று நடைபெற்ற 35வது போட்டியில் குஜராத் லயன்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிக்கொண்டன. முதலில் விளையாடிய குஜராத் அணி 20ஓவர்களில் 9விக்கெட்டுக்கு 153ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய மும்பை அணியும் 20ஓவர் முடிவில் எல்லா விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்கள் எடுக்க ஆட்டம் சூப்பர் ஓவருக்கு மாறியது.
சூப்பர் ஓவரில் முதலில் விளையாடிய மும்பை அணி 5பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளையும் இழந்து 11ரன்கள் சேர்த்தது. பின்னர் சேஸ் செய்யக் களமிறங்கிய குஜராத் அணி மெக்கல்லம், ஃபின்ச் களத்தில் இருந்தும், பும்ப்ராவின் அசத்தல் பந்துவீச்சில் ரன்கள் சேர்க்க திணறியது. அந்த அணி ஒரு ஓவரில் வெறும் 6ரன்களே எடுத்தது. இதனால் மும்பை அணி 5ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது.