Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இன்று ஜோஷ்னா சின்னப்பா - தீபிகா பல்லீகல் மோதல்

19 வது ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் சென்னையில் நடந்தது வருகிறது. நேற்று நடந்த அரையிறுதியில் இந்திய வீராங்கனை தீபிகா பல்லீகல், ஹாங்காங்கின் அன்னி  அயூ ஆகியோர் மோதினர். இதில் 3-1 என்ற செட் கணக்கில் வென்றார். 

ஜோஷ்னா சின்னப்பா - தீபிகா பல்லீகல்

மற்றொரு அரையிறுதி போட்டியில் ஜோஷ்னா சின்னப்பாவுடன், ஹாங்காங்கைச் சேர்ந்த டாங் டிஸ்விங் மோதினர். இதில் 3-0 என்ற  செட் கணக்கில் அதிரடியாக வெற்றி பெற்றார் ஜோஷ்னா. இதையடுத்து இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் ஜோஷ்னாவும்  தீபிகாவும் மோதஉள்ளனர். ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப்போட்டிகளில் இரண்டு இந்திய வீராங்கனைகள் மோதுவது இதுவே முதல் முறை ஆகும். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement