வெளியிடப்பட்ட நேரம்: 20:04 (01/05/2017)

கடைசி தொடர்பு:08:58 (02/05/2017)

#IPL10: துரத்தும் தொடர் தோல்விகள்... பெங்களூரு பரிதாபம்!

இன்று, ஐபிஎல் தொடரின் 38-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- பெங்களூரு அணிகள் மோதின. இதில் 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றிபெற்றுள்ளது.

mi

ஐபிஎல் 38-வது போட்டி, இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதிய இந்தப் போட்டியில், டாஸ் வென்ற பெங்களூரு அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்துக் களமிறங்கிய பெங்களூரு, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் குவித்தது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக டிவில்லியர்ஸ் 43 ரன்களும் பவன் நெகி 35 ரன்களும் குவித்தனர்.

இதையடுத்து, 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ், 19.5 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் குவித்து வெற்றிபெற்றுள்ளது. மும்பை அணியில் அதிகபட்சமாக ரோஹித் ஷர்மா ஆட்டமிழக்காமல் 37 பந்துகளில் 56 ரன்கள் குவித்தார். ஐபிஎல் போட்டிகளில் 4000 ரன்களைக் குவித்துள்ள ரோஹித் ஷர்மா, ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார். இதையடுத்து, மும்பை அணி 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. 11 போட்டிகளில் 8 தோல்விகளைச் சந்தித்துள்ள பெங்களூரு, அறையிறுதி வாய்ப்பை இழந்துள்ளது.

இதையடுத்து, புனே அணியும் குஜராத் அணியும் மோதும் மற்றொரு போட்டியில், டாஸ் வென்ற புனே, பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

Photo Courtesy: IPLT20