Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

#RPSvGL பென் ஸ்டோக்ஸ் மிரட்டல் சதம் : குஜராத் அணியை வீழ்த்தியது புனே!

 

ஐபிஎல் 10-வது சீசனில், இன்று இரண்டாவதாக நடந்த போட்டியில், ரைசிங் புனே அணியும், குஜராத் லயன்ஸ் அணியும் மோதின. குஜராத் அணி முதலில் பேட் செய்தது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்களான இஷான் கிஷன் மற்றும் பிரண்டன் மெக்குல்லம், சிறப்பான  துவக்கத்தை அளித்தனர். 20 ஓவர்களின் முடிவில், குஜராத் அணி 161 ரன்களைக் குவித்தது. புனே அணி சார்பில் இம்ரான் தாஹீர், ஜெய்தேவ் உனத்கட் ஆகியோர், தலா மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

 

Ben Stokes


இதையடுத்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் புனே அணி களமிறங்கியது. குஜராத் அணியின் பிரதீப் சங்வானும், பசில் தம்பியும் பவர் பிளேவில் சிறப்பாகப் பந்து வீசவே, புனே அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மென்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். இதைத்தொடர்ந்து, தோனி மற்றும் பென் ஸ்டோக்ஸ் இணைந்த பார்ட்னர்ஷிப், அந்த அணிக்குக் கைகொடுத்தது.


ஒருபுறம் தோனி பொறுமையாக ஆட, மறுபுறம் பந்துகளை நாலாபக்கமும் தெறிக்கவிட்டார், பென் ஸ்டோக்ஸ். இடையே, தோனி 26 ரன்களில் வெளியேறினாலும், பென் ஸ்டோக்ஸ் தொடர்ந்து அதிரடியாக ஆடி சதம் அடித்தார். இதனால், புனே அணி 19.5 ஓவர்களின் முடிவில், 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்து, த்ரில் வெற்றிபெற்றது.


63 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து, பென் ஸ்டோக்ஸ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள புனே அணிக்கு, இது 6-வது வெற்றியாக அமைந்தது. அதேநேரத்தில், 10 போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் அணிக்கு, இது ஏழாவது தோல்வியாகும்!

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement