வெளியிடப்பட்ட நேரம்: 04:22 (02/05/2017)

கடைசி தொடர்பு:08:11 (02/05/2017)

புஜாரா பெயர் அர்ஜுனா விருதுக்குப் பரிந்துரை

 

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த 'சுவர்' என்ற பெயருடன் வலம்வருபவர், புஜாரா. சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில், இரட்டைச் சதம் அடித்து, தோல்வியில் இருந்து அணியைக் காப்பாற்றினார். இதன்மூலம்தான் இந்திய அணி, ஆஸ்திரேலியத் தொடரைக் கைப்பற்ற முடிந்தது!


ஐபிஎல் போட்டிகளில், புஜாரவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. ஆனால், இந்திய டெஸ்ட் அணியின் தவிர்க்க முடியாத பேட்ஸ்மெனாக அவர் உருமாறியுள்ளார். இந்த நிலையில், புஜாராவின் பெயரை அர்ஜுனா விருதுக்காக, மத்திய அரசிடம் பிசிசிஐ பரிந்துரைத்துள்ளது. 

 

Pujara


மேலும், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை ஹர்மன்ப்ரீத் கவுர் பெயரையும்,  அர்ஜுனா விருதுக்கு பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது. அதேபோல ஹாக்கி விளையாட்டு வீரர்கள் எஸ்.வி.சுனில், தரம்வீர் சிங், தீபிகா ஆகியோரது பெயர்களை, ஹாக்கி இந்தியா அமைப்பு, அர்ஜுனா விருதுக்குப் பரிந்துரைசெய்துள்ளது.   

ஹாக்கி இந்தியா சார்பில், 'மேஜர் தயான் சந்த் விருது'க்கு ஆர்.பி.சிங் மற்றும் சும்ராய் டேடீ பெயர்களும், 'துரோணாச்சாரியார் விருது'க்கு சந்தீப் சங்வான் மற்றும் ரோமேஷ் பதானியா பெயர்களும், 'ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது'க்கு சர்தார் சிங் பெயரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.