Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐசிசி ஒருநாள் அணி தரவரிசை: மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது இந்தியா!

 

ஒரு நாள் கிரிக்கெட்டுக்கான அணிகளின் தர வரிசையை வெளியிட்டுள்ளது ஐசிசி. இதில், இந்திய அணி ஐந்து புள்ளிகக் கூடுதலாகப் பெற்று, மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்திய அணி தற்போது, 117 புள்ளிகளுடன், மூன்றாவது இடத்தில் உள்ளது. இதனால், மூன்றாவது இடத்தில் இருந்த நியூஸிலாந்து அணி, 115 புள்ளிகளுடன் நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

 

India team


தென் ஆப்ரிக்க அணி, 123 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி, 118 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. குறிப்பாக, இந்திய அணிக்கும் ஆஸ்திரேலிய அணிக்கும் ஒரு புள்ளிதான் வித்தியாசம். மற்ற அணிகளைப் பொறுத்தவரை, இங்கிலாந்து அணி ஐந்தாவது இடத்தில் உள்ளது. இலங்கை ஆறாவது இடம், வங்கதேசம் ஏழாவது இடம், பாகிஸ்தான் எட்டாவது இடம், மேற்கு இந்தியத் தீவுகள் ஒன்பதாவது இடம் மற்றும் ஆப்கானிஸ்தான் 10-வது இடத்தில் உள்ளது. ஜிம்பாப்வே11-வது இடத்திலும் அயர்லாந்து 12-வது இடத்திலும் உள்ளன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement