வெளியிடப்பட்ட நேரம்: 21:49 (02/05/2017)

கடைசி தொடர்பு:21:53 (02/05/2017)

#IPL10: யுவராஜ் விளாசல்! டெல்லிக்கு 186 ரன்கள் டார்கெட்!

ஐபிஎல் 10-வது சீசன் தொடங்கி ஒரு மாதத்துக்கும் மேல் ஆகிறது. புள்ளிகள் பட்டியலில் முதல் நான்கு இடத்தைப் பிடிப்பதற்கு அனைத்து அணிகளும் தங்கள் முழு பலத்தை பிரயோகப்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தத் தொடரின் 40-வது போட்டியில் நடப்பு சாம்பியனான டேவிட் வார்னர் தலைமையிலான ஹைதராபாத் அணியும் ஜாகிர் கான் தலைமையிலான டெல்லி அணியும் பலப்பரீட்சையில் இறங்கியுள்ளன.

டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸில் அதிக ஸ்கோர் எடுக்க வேண்டும் எண்ணத்துடன் களமிறங்கியது ஹைதராபாத் அணி. அந்த அணியின் தொடக்க வீரர்களான ஷிகர் தவான் மற்றும் டேவிட் வார்னர் முறையே 28 மற்றும் 30 ரன்கள் எடுத்து, அதிக ஸ்கோர் எடுப்பதற்கான வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். இதையடுத்து, மிடில் ஆர்டரில் களமிறங்கிய யுவராஜ் சிங், 41 பந்துகளில் 70 ரன்கள் எடுத்தார். இதனால், ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 185 ரன்கள் குவித்தது.

ஏற்கெனவே தொடர் தோல்விகளால் துவண்டிருக்கும் டெல்லி அணி, 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்க உள்ளது.

நன்றி: IPL