கிரிக்கெட் ரசிகர்களுக்கு நற்செய்தி... சாம்பியன்ஸ் ட்ராஃபியில் இந்திய அணி!

BCCI

இந்திய கிரிக்கெட் சம்மேளனமான பிசிசிஐ-க்கும் ஐசிசி-க்கும் நிலவி வந்த பனிப்போரை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாக கமிட்டி, 'சாம்பியன்ஸ் ட்ராஃபிக்கு விளையாடப் போகும் இந்திய அணியை உடனடியாக அறிவிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டுள்ளது. 

சாம்பியன்ஸ் ட்ராஃபிக்கான அணியைத் தேர்வு செய்வதற்கு ஏப்ரல் 25-ம் தேதி கடைசி நாளாக இருந்த நிலையில், ஏன் இதுவரை இந்திய அணியை தேர்ந்தெடுப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அந்த நிர்வாகக் குழு கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், பிசிசிஐ-க்கும் ஐசிசி-க்கும் இடையில் கிரிக்கெட் போட்டிகள் மூலம் வரும் வருவாயை பகிர்மானம் செய்து கொள்வதில் சச்சரவு இருந்தது. இந்த சிக்கலை பிசிசிஐ சற்று எதேச்சதிகாரமாக கையாண்டது. இதற்கும் நிர்வாகக் குழு கண்டனம் தெரிவித்தது. 

'வரும் ஜூன் 1-ம் தேதி ஆரம்பிக்கப் போகும் சாம்பியன்ஸ் ட்ராஃபியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, கோப்பையை தக்கவைத்துக் கொள்ள அனைத்து விதமான முன்னேற்பாடுகளும் செய்ய வேண்டும். ஆனால், ஏப்ரல் 25-ம் தேதி அனுப்பியிருக்க வேண்டிய அணியின் பட்டியலை இதுவரை அனுப்பி வைக்கவில்லை. எனவே, உடனடியாக இந்திய அணியைத் தேர்வு செய்வதற்கு நடவடிக்கை எடுத்து அதை ஐசிசி-க்கு அனுப்பி வையுங்கள்' என்று பிசிசிஐ-க்கு கறாராக தெரிவித்துள்ளது உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நிர்வாகக் குழு. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!