Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரிஷப் பன்ட்டின் அதிரடிக்கு... சச்சின் சொன்னது இதுதான்! #Rishabhpant

 

டேவிட் வார்னர், வீரேந்திர சேவாக், கௌதம் கம்பீர், கெவின் பீட்டர்சன், யுவராஜ் சிங்.... இவர்களெல்லாம் 10 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில், டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இருந்த அதிரடி பேட்ஸ்மேன்கள். தற்போது இவர்களையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு, ஒருவர் தற்போதைய டெல்லி அணியில் உள்ளார்; அவர்தான் அடுத்த தோனி என வர்ணிக்கப்படும் ரிஷப் பன்ட்! 

 

 

நேற்று டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில், குஜராத் லயன்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. இதில், குஜராத் அணி ரெய்னா மற்றும் தினேஷ் கார்த்திக்கின் அதிரடியால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 208 ரன்கள் குவித்தது. 209 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் கடினமான இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி, முதல் விக்கெட்டை (கருண் நாயர்) விரைவாக இழந்தாலும், 2-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சஞ்சு சாம்சன் மற்றும் ரிஷப் பன்ட், பவுண்டரிகளாகவும் சிக்ஸர்களாகவும் விளாசித் தள்ளினர்!

 

 

தான் உட்பட எத்தனை பௌலர்களை மாற்றி பந்து வீசினாலும், விக்கெட் கிடைக்காமல் திண்டாடினார் சுரேஷ் ரெய்னா. 10.3 ஓவர்கள். களத்தில் நின்ற இந்த ஜோடி, 143 ரன்களைக் குவித்தது. சாம்சன் 31 பந்துகளில் 61 ரன்களும், சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பன்ட் 43 பந்துகளில் 97 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

ராகுல் டிராவிட்டால் இந்திய அணிக்கு அடையாளம் காணப்பட்ட இந்த இருவரின் அதிரடியால், 17.3 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டியது டெல்லி அணி. மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பன்ட்டிற்கு, கிரிக்கெட் மற்றும் பாலிவுட் உலகில் இருந்து பலத்த பாராட்டுகள் கிடைத்துள்ளன. அதை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்...

 

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement