Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

81 ரன்களில் சுருண்டது பாகிஸ்தான் : மேற்கு இந்தியத் தீவுகள் பலே வெற்றி!

பாகிஸ்தான் அணி, தற்போது மேற்கு இந்தியத்தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது. இந்த நிலையில், இரு அணிகளும்  இரண்டாவது டெஸ்ட்டில் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத்தீவுகள், தனது முதல் இன்னிங்ஸில் 312 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 


அந்த அணியின் ரோஸ்டன் சேஸ் 131 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில், அபாஸ் நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி,  தனது முதல் இன்னிங்ஸில், 393 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் அசார் அலி 105 ரன்கள் எடுத்திருந்தார். குறிப்பாக, மிஸ்பா உல்ஹக் 99 ரன்களில் அவுட் ஆகி, சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். 

 


மேற்கு இந்தியத்தீவுகளின் செனான் கேப்ரியல் நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றினார்.  மேற்கு இந்தியத்தீவுகள், தனது இரண்டாவது இன்னிங்ஸில் 268 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஹோப் 90 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் அபாஸ் இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதன்மூலம், பாகிஸ்தான் அணி 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய டார்கெட்டுடன் களமிறங்கியது.


துவக்கத்தில், பாகிஸ்தான் அணி எளிதில் வெற்றிபெற்றுவிடும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால், மேற்கு இந்தியத்தீவுகள் அணியின் கேப்ரியல் சுழல் ஜாலம்செய்து, பாகிஸ்தான் அணிக்கு ஷாக் அளித்தார். அவருடன் கேப்டன் ஹோல்டரும் தனது சிறப்பான பந்து வீச்சுமூலம், பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களைத் திணறடித்தார். 

Cabrial


இதனால், பாகிஸ்தான் வீரர்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அணியை 81 ரன்களில் சுருட்டி, கெத்துக்காட்டியது மேற்கு இந்தியத்தீவுகள். இதன்மூலம், 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது மேற்கு இந்தியத்தீவுகள். கேப்ரியல் ஐந்து, ஹோல்டர் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.


மூன்று போட்டிகள்கொண்ட டெஸ்ட் தொடர், இதன்மூலம் 1-1 என்ற சமன் ஆகியுள்ளது. ஐபிஎல் குஷியில் உள்ள நம் நெட்டிசன்கள், பாகிஸ்தான் இப்படிப் படுதோல்வி அடைந்தால் சும்மாவா இருப்பார்கள்? சமூக வலைதளங்களில் பாகிஸ்தான் அணியை வறுத்தெடுத்து வருகின்றனர். அதே நேரத்தில், மேற்கு இந்தியத்தீவுகள் அணிக்குப் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close