மெஸ்ஸி மீதான தடையை விலக்கியது பிஃபா!

அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி நான்கு போட்டிகளில் விளையாட விதிக்கப்பட்ட தடையை விலக்கிக் கொள்வதாக சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

மெஸ்ஸி

அர்ஜென்டினாவைச் சேர்ந்த கால்பந்து வீரர் மெஸ்ஸி உலகப் புகழ்பெற்றவர். இவர் கடந்த மாதம் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளுக்கான தகுதிச் சுற்றில் சிலி அணியை எதிர்த்து விளையாடினார். அப்போது நடுவர் எமர்சன் அகஸ்டோவை அவமதிக்கும் வகையில் மெஸ்ஸி பேசினார். இதையடுத்து பிஃபா அமைப்பு மெஸ்ஸிக்கு நான்கு போட்டிகளில் விளையாடத் தடை விதித்தது. இதை எதிர்த்து மெஸ்ஸியின் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்நிலையில், மெஸ்ஸி மீது விதிக்கப்பட்ட தடையை விலக்கிக் கொள்வதாக பிஃபா அறிவித்துள்ளது. இதுகுறித்து பிஃபா வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கால்பந்து ஆட்டத்தை பொறுத்தவரை நடுவரை அவமதிப்பது தொடர்பான புகார்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுப்பது வழக்கம். இதன்படி மெஸ்ஸிக்கு விதிக்கப்பட்ட தடையில், அவர் பொலிவியாவுடன் நடந்த போட்டியில் விளையாடவில்லை. இதையடுத்து அவரது சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளதால், அடுத்த மூன்று போட்டிகளுக்கு தடை விலக்கிக் கொள்ளப்படுகிறது' என அறிவிக்கப்பட்டுள்ளது. தடை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதால், உருகுவே, வெனிசுலா, பெரு அணிகளுக்கு எதிரான உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டிகளில் மெஸ்ஸி விளையாடவுள்ளார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!