Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

#IPL10: கிங்ஸ் லெவன் பஞ்சாப்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பலப்பரீட்சை

இன்று ஐபிஎல் 43-வது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகின்றன. முதலில் ஆடிய பஞ்சாப் அணி 7 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் குவித்துள்ளது.

ஐபிஎல்

ஐபிஎல் போட்டியின் 43-வது ஆட்டம் பெங்களூரில் நடைபெறுகிறது. பெங்களூர்- பஞ்சாப் அணிகள் மோதும் இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் குவித்துள்ளது.

பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக அக்ஸர் பட்டேல் 38  ரன்களும், மனன் வோஹ்ரா 25 ரன்களும் குவித்தனர். ஷான் மார்ஷ் 20 ரன்களும், சாஹா 21  ரன்களும் குவித்தனர். பெங்களூர் தரப்பில் அனிகெட் சவுத்ரி, சஹல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அரவிந்த், நெகி, வாட்சன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்குகிறது பெங்களூர். 9 போட்டிகளில் விளையாடிய பஞ்சாப், தற்போது 8 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் இருக்கிறது. இப்போட்டியில் வெல்வதன் மூலம் பஞ்சாப் அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள முடியும். பெங்களூர் அதன் அரையிறுதி வாய்ப்பை முன்னரே இழந்துவிட்டது.

Photo Courtesy: IPLT20
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close