Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

#RCBvKXIP தொடரும் பெங்களூர் பரிதாபங்கள்.. பஞ்சாப் அணி செம ஹேப்பி..!

ஐபிஎல் போட்டியின் 43-வது ஆட்டம் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடந்தது. பெங்களூர்- பஞ்சாப் அணிகள் இந்தப் போட்டியில் மோதின. டாஸ் வென்ற பெங்களூர் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் குவித்தது.

 

punjab

பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக அக்ஸர் பட்டேல் 38  ரன்களும், மனன் வோஹ்ரா 25 ரன்களும் குவித்தனர். ஷான் மார்ஷ் 20 ரன்களும், சாஹா 21  ரன்களும் குவித்தனர். பெங்களூர் தரப்பில் அனிகெட் சவுத்ரி, சஹல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அரவிந்த், நெகி, வாட்சன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து 139 ரன்கள் எடுத்தால்  வெற்றி என்ற எளிய இலக்குடன் பெங்களூர் களமிறங்கியது. இந்த சீசனில் அந்த அணிக்கு தொடரும் சோகம், இந்தப் போட்டியிலும் எதிரொலித்தது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் மந்தீப் சிங்கைத் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். மந்தீப் சிங் 46 ரன்களில் அவுட் ஆனார். பெங்களூர் அணி 19 ஓவர்களில் 119 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 19 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி தரப்பில் சந்தீப் சிங், அக்சர் பட்டேல் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.


10 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் அணிக்கு இது 5-வது வெற்றியாகும். இந்த வெற்றி மூலம் பஞ்சாப் அணி தனது பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. 12 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூர் அணிக்கு இது 9-வது தோல்வியாகும். அந்த அணி ஏற்கெனவே பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement