இந்த நாட்டுக்குத்தான் விரைவில் வரவிருக்கிறார் ரொனால்டோ! | Ronaldo wants to vist India soon

வெளியிடப்பட்ட நேரம்: 17:01 (06/05/2017)

கடைசி தொடர்பு:17:06 (06/05/2017)

இந்த நாட்டுக்குத்தான் விரைவில் வரவிருக்கிறார் ரொனால்டோ!

விரைவில் இந்தியா வரவிருப்பதாக தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விருப்பம் தெரிவித்துள்ளார் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

ronaldo

கால்பந்தாட்டத்தில் பிலே, பெக்காம் எல்லாம் கடந்த காலத்தின் கில்லாடிகள்தாம். ஆனால் தற்போதைய ஜென் Z தலைமுறையைப் பொறுத்தவரையில் கால்பந்து என்றாலே அது மெஸ்ஸியும் ரொனால்டோவும் மட்டுமே. போர்ச்சுக்கல் அணிக்காக விளையாடும் ரொனால்டோவுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் குவிந்துள்ளனர். குறிப்பாக இந்தியாவில் பல இளைஞர்களும் சிறுவர்களும் ரொனால்டோவின் ஆட்டத்துக்கு அடிமைகள். யூரோ கோப்பை, சாம்பியன்ஸ் லீக் கோப்பை, பலொன் டி விருது என எதையும் விட்டுவைக்கவில்லை ரொனால்டோ.

இந்நிலையில் இந்தியா வர அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் 100 மில்லியன் ஃபாலோயர்ஸ் வந்ததையடுத்து அவர் வெளியிட்ட வீடியோ பதிவில் உலகம் முழுவதும் இருக்கும் அவரின் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். இதையடுத்து அவர் செல்ல விரும்பும் நாடுகளைக் குறிப்பிட்டுப் பேசுகையில், விரைவில் இந்தியா செல்ல வேண்டும் என அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். ரொனால்டோவின் இந்தத் தகவலால் அவரின் இந்திய ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.