வெளியிடப்பட்ட நேரம்: 17:24 (06/05/2017)

கடைசி தொடர்பு:17:42 (06/05/2017)

தோனி இல்லாத சிஎஸ்கேவை ரசிகர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா? #VikatanSurveyResults

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் அதிகாரபூர்வமாக உள்ளே வருவதற்கான சிக்னல்கள் கிடைத்துவிட்டன. இரண்டு ஆண்டுகளாக சி.எஸ்.கே இல்லாததால் தங்களுக்குப் பிடித்த  வீரர்கள் உள்ள அணிக்கு ஆதரவை அளித்துவந்தார்கள் ரசிகர்கள். அடுத்த ஆண்டு ரசிகர்களின் ஆதரவு யாருக்கு என்பதை அறியவே, இந்த #VikatanSurvey. விகடன்.காம் வாசகர்களிடம் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பாக இப்படியொரு சர்வேவை எடுத்திருந்தோம். தோனிக்கு இதில் மிகப்பெரிய அளவில் ஆதரவு குவிந்துள்ளது.

ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்? 

1. சி.எஸ்.கே-வுக்கு யார் கேப்டனாகப் பொறுப்பேற்க வேண்டும்?

தோனி கேப்டனாக வேண்டுமா?

முதல் கேள்விக்கே, ரசிகர்கள் `தோனி' என்ற ஆப்ஷனைத் தெறிக்கவிட்டார்கள். 96.8 சதவிகிதம் பேர் `தோனிதான் வேண்டும்' எனச் சொல்லியிருக்கிறார்கள். தோனிக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகள் பெற்றது ரெய்னா. அவரைத் தொடர்ந்து பிரண்டன் மெக்குல்லம், ஸ்டீவன் ஸ்மித் இருக்கின்றனர். அது சரி, தோனிக்கும் அடுத்த இடத்தில் இருக்கும் ரெய்னாவுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் எவ்வளவு தெரியுமா?  95.2 சதவிகிதம்.  

2. அடுத்த ஆண்டு சி.எஸ்.கே என்ன இடம் பிடிக்கும்?  

விகடன் சர்வே

`இது என்ன பாஸ் கேள்வி?  நாம எப்பவும் சாம்பியன்தான்' எனச் சொல்லியிருக்கிறார்கள். `அடுத்த வருஷம் நாங்க வருவோம். அப்போ அத்தனை அணிக்கும் இருக்கு வேட்டு' எனச் சொல்லிவைத்தார்போல ஆயிரக்கணக்கில்  இதே ரீதியிலான கமென்ட்ஸ் குவிந்தன. 

89.6 சதவிகிதம் பேர் `சென்னைதான் அடுத்த வருட சாம்பியன்' என அடித்துச்சொல்கிறார்கள். 6.4 சதவிகிதம் பேர் `பிளே ஆஃப் நிச்சயம்!' என்கிறார்கள். வெறும் 1.3 சதவிகிதம் பேர் மட்டுமே `சென்னை, கடைசி நான்கு இடங்களைப் பிடிக்கும்' என  ஓட்டு போட்டிருக்கிறார்கள். 

3. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த அணிக்கு எதிராக அதிக ஆதிக்கம் செலுத்தும்?

விகடன் சர்வே

`எங்களுக்கு எப்பவும் எதிரி, மும்பை இந்தியன்ஸ்தான்'. இது சி.எஸ்.கே ரசிகர்கள் சர்வேயில் சொன்னது. ஏழு எதிரணிகள் இருந்தாலும், 53.3 சதவிகிதம் பேர் மும்பை இந்தியன்ஸ் அணியைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். மும்பைக்கு அடுத்தபடியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் இடம்பிடித்துள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராகத்தான் குறைவான ஆதிக்கம் செலுத்தும் என்பது ரசிகர்கள் கருத்து. 

4.  தோனி, அணியில் இல்லை என்றாலும் சி.எஸ்.கே-வுக்கு ஆதரவு வழங்குவீர்களா? 

` `ரெண்டு கண்ணுல எதை வெட்டிக்கொடுப்ப?'னு கேட்கிற மாதிரி இருக்கு பாஸ் உங்கள் கேள்வி.'

`மொதல்ல இந்தக் கேள்வியே அபத்தம்.'

`சி.எஸ்.கே இல்லாம தோனி இல்லை; தோனி இல்லாம சி.எஸ்.கே-வும் இல்லை.'

இதெல்லாம் ரசிகர்கள் சொன்ன கமென்ட்ஸ். சரி, விஷயத்துக்கு வருவோம். `தோனி இல்லாத சி.எஸ்.கே-வை ஆதரிப்போம்' என 54.1 சதவிகிதம் பேர் சொல்லியிருக்கிறார்கள். 45.1 சதவிகிதம் பேர் `தோனி இல்லாம சி.எஸ்.கே-வை ஆதரிக்க மாட்டேன்' எனச் சொல்லியிருக்கிறார்கள். 

விகடன் சர்வே

சென்னை, தோனியின் கோட்டை என்பது மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது. 

5.  இதில் எந்தெந்த வீரர்கள் நிச்சயம் சி.எஸ்.கே அணியில் இடம்பெற வேண்டும் என விரும்புகிறீர்கள் ? ஐந்து பேரை  மட்டும் குறிப்பிடுங்கள் எனச் சொல்லியிருந்தோம்

 

சர்ப்பரைஸ் ... சர்ப்பரைஸ் ... சர்ப்பரைஸ் . 

தோனியைவிட அஸ்வினுக்கு அதிக ஓட்டுகள் விழுந்துள்ளன. சுமார் பத்து சதவிகிதத்துக்கும் அதிகமான ஓட்டுகள் என்பது கவனிக்கவேண்டிய விஷயம்.

 

ரவிச்சந்திர அஸ்வினுக்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய மவுசு இருப்பது நிரூபணமாகியுள்ளது. அஸ்வின், தோனிக்கு அடுத்தபடியாக ஜடேஜாவுக்கு அதிக ஓட்டுகள் விழுந்துள்ளன. இவர்களுக்கு அடுத்தபடியாக பென் ஸ்டோக்ஸ்க்கு 59.20 சதவிகிதம் வாக்களித்திருக்கிறார்கள். ஸ்டீவன் ஸ்மித், டுவைன் ஸ்மித் ஆகியோருக்கும் கணிசமான ஆதரவு கிடைத்திருக்கிறது. 

6.  மேட்ச் பிக்சிங்கில் குற்றம்சாட்டப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட  சி.எஸ்.கே-வுக்கு   உங்கள் முழுமையான  ஆதரவை மீண்டும் வழங்குவீர்களா? அதில் எந்தத் தயக்கமும் இல்லையா?  

விகடன் சர்வே

இதற்கும் ஆச்சர்யமான முடிவு கிடைத்திருக்கிறது. 86.2 சதவிகிதம் பேர் `எந்தத் தயக்கமும் இல்லை' எனத் தெரிவித்திருக்கிறார்கள். ஆக, `பொழுதுபோக்குக்காக மேட்ச் பிக்சிங், சூதாட்டம், பெட்டிங் போன்றவற்றை, தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் எந்தத் தயக்கமுமின்றி ஆதரிக்கிறார்களா?' என்ற கேள்வியும் இப்போது எழுந்துள்ளது. 

 

 


டிரெண்டிங் @ விகடன்