Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அஸ்லன்-ஷா ஹாக்கி போட்டி: வெண்கலம் வென்றது இந்தியா!

அஸ்லன்-ஷா ஹாக்கி போட்டியில் நியூசிலாந்தை 4-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.

இந்திய ஹாக்கி

இன்று மாலை மலேசியாவில் நடந்த அஸ்லன்-ஷா ஹாக்கி போட்டியின் வெண்கலப் பதக்கத்துக்கான சுற்றில் நியுசிலாந்தை 4-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியா பதக்கத்தை வென்றுள்ளது. துவக்கத்தில் கோல் ஏதும் இல்லாமல் இரு அணிகளும் தவித்து வந்த நிலையில் ஆட்டத்தின் இரண்டாம் பாதியிலிருந்து ஆட்டத்தை தன் வசம் கொண்டுவந்தது இந்தியா.

போட்டியின் நட்சத்திர வீரராக ரூபிந்தர் பால் சிங் இரண்டு கோல்கள் அடித்து பதக்கத்தினை உறுதி செய்தார். எஸ்.வி.சுனில் மற்றும் தல்விந்தர் இருவரும் தலா ஒரு கோல் அடித்து போட்டியினை வென்றனர். அஸ்லன்-ஷா ஹாக்கி போட்டியின் துவக்கத்தில் முன்னணியில் இருந்துவந்த இந்திய அணி, சில தோல்விகளால் இடையில் வீழ்ந்தது. தற்போது தொடரில் வெண்கலப் பதக்கத்துடன் இந்திய வீரர்கள் நாடு திரும்பவுள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement