உலக ஈட்டி எறிதல் போட்டிக்கு முன்னேறிய இரண்டாம் இந்திய வீரர்! | World Javelin throw championship: Devender Singh the Second Indian to hit the competition

வெளியிடப்பட்ட நேரம்: 21:13 (08/05/2017)

கடைசி தொடர்பு:21:13 (08/05/2017)

உலக ஈட்டி எறிதல் போட்டிக்கு முன்னேறிய இரண்டாம் இந்திய வீரர்!

இந்திய கிராண்ட் பிரிக்ஸ் போட்டிகளில் பெற்ற தங்கப்பதக்கத்தின் மூலம் உலக ஈட்டி எறிதல் சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன்னேறிய இரண்டாம் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார் தேவேந்திர சிங்.

தேவேந்திர சிங்


இந்தியத் தடகளப் போட்டிகளின் இறுதிச்சுற்று நேற்று பாட்டியாலாவில் நடைபெற்றது. இப்போட்டியில் தனது முந்தைய சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார் தேவேந்திர சிங். இறுதிச்சுற்றில் 83.32 மீ தூரம் ஈட்டி எறிந்து, லண்டனில் நடைபெறவிருக்கும் உலகப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். உலக சாம்பியன்ஷிப்பின் தகுதி தூரமே 83.00 மீ தான் என்பது குறிப்பிடத்தக்கது.


விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த தேவேந்திர சிங் தற்போது ராணுவத்தில் ஜூனியர் பிரிவு அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். தன்னுடைய பள்ளிக்காலத்தில் கபடி, கிரிக்கெட் போன்ற போட்டிகளில் ஈடுபட்டு வந்தவர் தன்னுடைய உடற்கல்வி ஆசிரியரின் தூண்டுதலால் ஈட்டி எறிதலில் பயிற்சி பெற்று சாதனை புரிவதாகப் பெருமையுடன் தெரிவித்தார் தேவேந்திர சிங்.