Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

#IPL10 - மும்பையின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளிவைத்த நடப்பு சாம்பியன் ஹைதராபாத்!

ஐபிஎல் 10-வது சீசனின் லீக் போட்டிகள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன. ப்ளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெற, ஒவ்வொரு அணியையும் தங்களின் முழுப் பலத்தை பிரயோகப்படுத்திவருகின்றன. விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் 10-வது தொடரின் 48-வது போட்டியில், நடப்பு சாம்பியன் ஹைதராபாத், புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் மும்பை அணியை எதிர்கொண்டது. 

போட்டிக்கான டாஸை வென்று, மும்பை முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. ஹைதராபாத் அணிக்கு நெருக்கடிகொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில், அதிகபட்ச சேஸிங் ஸ்கோரை நிர்ணயிக்கும் நோக்கில், களமிறங்கிய மும்பை பேட்ஸ்மேன்களில் கேப்டன் ரோகித் ஷர்மாவைத் தவிர யாரும் சோபிக்கவில்லை. ரோகித் ஷர்மா மட்டும், தன்னந்தனியாக 45 பந்துகளுக்கு 67 ரன்கள் குவித்தார். மற்ற முன்னணி பேட்ஸ்மேன்கள் யாரும் அவருடன் ஜோடி சேர்ந்து ரன் குவிப்பில் ஈடுபடாததால், மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 138 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதையடுத்து, வலுவான பேட்டிங் ஆர்டரைகொண்ட ஹைதராபாத் அணி, 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 3 விக்கெட்டுகள் இழந்த நிலையில், 18.2 ஓவர்களிலேயே எட்டியது ஹைதராபாத். இதன் மூலம், தொடர் வெற்றியில் திளைத்துக்கொண்டிருந்த மும்பை அணிக்கு முற்றுப்புள்ளி வைத்தது, வாரனர் தலைமையிலான ஹைதராபாத் அணி. ஷிகர் தவான் அதிகபட்சமாக 46 பந்துகளில் 62 ரன்கள் குவித்தார். 

இந்தத் தோல்விக்குப் பிறகும் மும்பை அணி, புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் நீடித்துவருவது குறிப்பிடத்தக்கது. ஹைதராபாத் அணி, தொடர்ந்து நான்காவது இடத்தைத் தக்கவைத்துகொண்டது.

நன்றி: IPL

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close