ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கெயில்!

தொடர் தோல்விகளைச் சந்தித்துவரும் பெங்களூரு அணியின் அதிரடி வீரர் கெயில், ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

கெயில்

ஐபிஎல் போட்டிகள் நிறைவடையும் நிலைக்கு வந்துவிட்டது. மும்பை, புனே, ஹைதராபாத் என கோப்பையை வெல்ல அணிகள் போட்டி போட்டுக்கொண்டிருக்கையில், பெங்களூரு அணி பரிதாபமான நிலையில் உள்ளது. இதுவரை நடந்த போட்டிகளில், இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றிப்பெற்று கடைசி இடத்தில் உள்ளது பெங்களூரு. கெயில், கோலி, டி வில்லியர்ஸ் போன்ற உலகத் தரம் வாய்ந்த வீரர்கள் இருந்தும் பெங்களூரு தொடர் தோல்விகளைச் சந்தித்துவருகிறது.

இதனிடையே பெங்களூரு அணி வீரர் கிரிஸ் கெயில், பெங்களூரு ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார். இதுகுறித்து இன்று பேசிய அவர்,' ரசிகர்களிடம் எனது மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறேன். தொடர் தோல்விகளுக்குப் பின்னும் அவர்கள் மைதானத்துக்கு வருவது ஆச்சர்யமளிக்கிறது. அடுத்த தொடரில் சிறப்பாக விளையாடுவோம்' எனக் கூறியுள்ளார். அதிரடி ஆட்டத்துக்குப் பெயர்போன கெயில், இந்தத் தொடரில் 8 போட்டிகளில் 152 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!