வெளியிடப்பட்ட நேரம்: 21:58 (10/05/2017)

கடைசி தொடர்பு:09:30 (11/05/2017)

#IPL10: ஃபின்ச் அதிரடி ஆட்டம்... 195 ரன்கள் குவித்தது குஜராத்

 ஐபிஎல் 50-வது போட்டியில் இன்று, குஜராத் லயன்ஸ் அணியும்  டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதுகின்றன. முதலில் ஆடிய குஜராத், 5 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் குவித்துள்ளது.

குஜராத்

ஐபிஎல் தொடரின் 50-வது போட்டி கான்பூரில் நடைபெறுகிறது. குஜராத்-டெல்லி மோதும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி, பந்து வீச்சைத் தேர்வுசெய்தது. இதையடுத்து களமிறங்கிய குஜராத் லயன்ஸ், 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் குவித்துள்ளது.

குஜராத் அணியில் அதிகபட்சமாக, ஃபின்ச் 39 பந்துகளில் 69 ரன்கள் குவித்தார். இதில் 4 சிக்ஸர்கள் 6 பவுண்டரிகள் அடங்கும். மேலும், தினேஷ் கார்த்திக் 40 ரன்களும், இஷான் கிஷன் 34 ரன்களும் குவித்தனர். டெல்லி தரப்பில் ஷமி, கம்மின்ஸ், அமித் மிஷ்ரா, பிரெத்வெயிட் தலா ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளனர். இதையடுத்து, 196 ரன்களை இலக்காகக்கொண்டு களமிறங்குகிறது டெல்லி.

Photo Courtesy: IPL10