Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

#IPL10 - த்ரில் வெற்றியடைந்த டெல்லி... ப்ளே-ஆஃப் யாருக்கெல்லாம் இருக்கு?

வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் ஐபிஎல் 10-வது சீசனின் லீக் போட்டிகள் முடிவுபெறுகின்றன. ஆனால், தொடரின் அடுத்த கட்டத்தை நோக்கி யாரெல்லாம் நகர்வர் என்று இன்னும் தெரியாத நிலை நிலவுகிறது.

இந்நிலையில், இந்த சீசனின் 50-வது போட்டி, டெல்லி மற்றும் குஜராத் அணிகளுக்கிடையில் கான்பூரில் நடைபெற்றது. இந்தத் தொடரில், ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இந்த இரு அணிகளுமே இழந்ததாகவே கருதப்படுகிறது.

போட்டிக்கான டாஸை வென்ற டெல்லி அணி, பௌலிங்கை தேர்வுசெய்தது. இதையடுத்து, முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய குஜராத் அணியின் இஷான் கிஷன், தினேஷ் கார்த்திக் மற்றும் ஆரோன் பின்ச் ஆகியோர், அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். பின்ச், 39 பந்துகளில் 69 ரன்கள் எடுத்தார். குஜராத் அணி, 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து, இமாலய இலக்கான 196 ரன்களை நோக்கிக் களமிறங்கியது டெல்லி. அந்த அணி, கடைசியாக விளையாடிய சில போட்டிகளில், மிரளவைக்கும் வகையில் அதிக ஸ்கோர்களை சேஸ் செய்துவருவதால், குஜராத் அணியின் ஸ்கோரை எட்டிப் பிடிக்குமா என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் தொற்றிக்கொண்டது. அந்த அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான கருண் நாயர், 15 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து சேஸிங் செய்ய நல்ல ஆரம்பத்தைத் தந்தார். இதையடுத்து, ஷ்ரேயாஸ் ஐயர் 57 பந்துகளில் 96 ரன்கள் குவித்தார். அவர், குஜராத் அணி பந்துவீச்சை நாலாபுறமும் பந்தாடினார். 19.4 ஓவர்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டி, மீண்டும் ஒரு சாதனையை நிகழ்த்தியது டெல்லி அணி.

இந்தப் போட்டியில் வெற்றிபெற்றபோதிலும் டெல்லி அணி, ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெறும் என்று சொல்வதற்கில்லை. மேலும், மும்பை அணியைத் தவிர, வேறு எந்த அணியும் ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெற்றுவிட்டது என்று உறுதியாகக் கூறமுடியாத நிலைதான் உள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close