Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஐபிஎல் பெட்டிங் : விசாரணை வளையத்தில் இரண்டு குஜராத் லயன்ஸ் வீரர்கள்..!

ஒரு பக்கம் ஐபிஎல் போட்டிகள் பரபரப்பாக நடந்து வரும் நேரத்தில், மறுபக்கம் பெட்டிங் சம்பவங்களும் நடந்து வருகின்றன. நேற்று முன் தினம் குஜராத்-டெல்லி அணிகள் மோதிய போட்டி கான்பூரில் நடந்தது.

Gujarat lions

Representative image
 

அப்போது பெட்டிங்கில் ஈடுபட்ட மூன்று பேரை, போலீஸார் கைது செய்துள்ளனர். குறிப்பாக, கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பேர், வீரர்கள் தங்கியிருந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில்தான் தங்கியுள்ளனர். நயன் ஷா, விகாஷ் சவுகான், ரமேஷ் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடமிருந்து 5 மொபைல் போன்கள் மற்றும் 4.90 லட்ச ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

முக்கியமாக கைது செய்யப்பட்டுள்ள ஷா என்பவர், நாடு முழுவதும் பெரிய நெட்வொர்க் வைத்துள்ளவர் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குஜராத் லயன்ஸ் அணியின் இரண்டு வீரர்களின் பெயர்கள் அடிபட்டுள்ளது. ஆனால், அவர்கள், இதில் சம்பந்தப்பட்டுள்ளது உறுதியாகவில்லை என்று போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். இதைத்தொடர்ந்து, அந்த இரு வீரர்களிடம் போலீஸார் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close