வெளியிடப்பட்ட நேரம்: 18:29 (13/05/2017)

கடைசி தொடர்பு:10:36 (15/05/2017)

ரிக்கி பான்டிங்கின் ஐ.பி.எல் அணியில் தோனி தான் கேப்டன்!

ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பான்டிங் தேர்ந்தெடுத்துள்ள ஐ.பி.எல் அணியில் இந்திய வீரர் தோனியை கேப்டனாக அறிவித்துள்ளார்.

ponting

ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பான்டிங் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார். இவரது கோச்சிங்கில் தான் 2015-ல் மும்பை அணி கோப்பையை வென்றது. இதனிடையே பான்டிங் தான் தேர்ந்தெடுத்துள்ள ஐபிஎல் உத்தேச அணியை அறிவித்துள்ளார். அதில், இந்திய விரர் தோனியை கேப்டனாக அறிவித்துள்ளார் ரிக்கி பான்டிங்.

அதிரடி ஆட்டக்காரர் கெயில் மற்றும் டேவிட் வார்னர் தொடக்க ஆட்டக்காரர்களாகவும், விராட் கோலி, ரோஹித் ஷர்மா, சுரேஷ் ரெய்னாவை 3,4,5-வது இடங்களுக்கு அவர் தேர்ந்தெடுத்துள்ளார். இந்தியாவின் முன்னாள் கேப்டன் தோனி 6-வது இடத்திலும், மேற்கிந்திய வீரர் பிராவோ 7-வது இடத்துக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சுழற்பந்து வீச்சாளர்களாக அமித் மிஷ்ரா மற்றும் ஹர்பஜன் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். வேகப்பந்து வீச்சாளர்களாக மலிங்கா மற்றும் ஆசிஷ் நெஹ்ரா அறிவிக்கப்பட்டுள்ளனர். புனே அணியில் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருந்தாலும் பான்டிங் அணியில் தோனி கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது அவரது ரசிகர்களிடத்தில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.