ஆசிய மல்யுத்த போட்டி: தங்கம் வென்றார் இந்திய வீரர் பஜ்ரங் புனியா

bajrang

ஆசிய மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கப்பதக்கம் வென்றார். 65 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் பஜ்ரங் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இறுதிப்போட்டியில் தென்கொரிய வீரர் செயுங்சுல் லீயை சந்தித்தார் பஜ்ரங். அவரை, 6-2 என வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார் பஜ்ரங். இதன் மூலம் ஆசிய சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டியில் இந்தியா வெல்லும் முதல் தங்கப்பதக்கம் இதுவாகும். தங்கம் வென்ற பஜ்ரங் புனியாவுக்கு குடியரசுத் தலைவர் உட்பட பல முக்கியஸ்தர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மற்றொரு போட்டியில், இந்திய வீராங்கனை சரிதா வெள்ளிப்பதக்கம் வென்றார். 58 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்ட இந்திய வீராங்கனை சரிதா, வெள்ளிப்பதக்கத்தை வென்றார். இறுதிப்போட்டியில் கிர்கிஸ்தான் வீராங்கனையிடம் தோல்வியை தழுவினார் சரிதா. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!