Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மகளிர் கிரிக்கெட்: இந்திய வீராங்கனைகள் உலக சாதனை!

மகளிர் கிரிக்கெட்டில், இந்திய வீராங்கனைகள் தீப்தி ஷர்மா - பூனம் ராவுத் முதல் விக்கெட்டுக்கு 320 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளனர்.

இந்தியா

இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர், தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இன்று, அயர்லாந்துக்கு எதிராக நடந்த போட்டியில், இந்திய வீராங்கனைகள் தீப்தி ஷர்மா- பூனம் ராவுத் முதல் விக்கெட்டுக்கு 320 ரன்கள் குவித்தனர். ஒரு நாள் போட்டிகளில், ஆண்கள் கிரிக்கெட் உட்பட இதுவே முதல் விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாகும். இதற்கு முன்னர், ஆண்கள் கிரிக்கெட்டில் 2006-ம் ஆண்டு இலங்கை வீரர்கள் ஜெயசூர்யா-தரங்கா முதல் விக்கெட்டுக்கு 286 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்தது.

மேலும், இந்திய வீராங்கனைகளில்  அதிகபட்சமாக ரன் குவித்தவர்களில் தீப்தி ஷர்மா முதலிடம் பிடித்துள்ளார். 160 பந்துகளை சந்தித்த அவர், 188 ரன்கள் குவித்தார். இதில் 27 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடங்கும். உலக அளவில் இது இரண்டாவது அதிகபட்சமாகும். பூனம் ராவுத், 109 ரன்கள் குவித்தார்.  50 ஓவர்களின் முடிவில், இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 358 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய அயர்லாந்து, 109 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. 249 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றிபெற்றது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement