Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'எதிர்காலத்தில் இந்தியாவுக்கு மிக முக்கிய கிரிக்கெட் வீரராக இவர் இருப்பார்!' - யாரைச் சொல்கிறார் டிராவிட்..!

Rahul Dravid

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட், தற்போது ஓய்வு பெற்று இளம் கிரிக்கெட் வீரர்களுக்குப் பயிற்சி கொடுத்து வருகிறார். குறிப்பாக, டெல்லி டேர்டெவில்ஸ் ஐபிஎல் அணிக்கு அவரும் ஒரு பயிற்சியாளராகச் செயல்பட்டு வருகிறார். நடப்பு ஐபிஎல் சீசனில் டெல்லி அணி, தான் விளையாடிய 14 போட்டிகளில் 6 இல் மட்டுமே வெற்றி பெற்று 6-வது இடத்தில் இந்தத் தொடரை முடித்துக் கொண்டது. 

இந்நிலையில் டிராவிட், டெல்லி அணிக்காக விளையாடி, கிரிக்கெட் ரசிகர்கள் மனதைக் கவர்ந்த ரிஷப் பேன்ட் 'இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரராக விளங்குவார்' என்று புகழாரம் சூட்டியுள்ளார். 

அவர் ரிஷப் பேன்ட் குறித்து மேலும், ' இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் அவர் மிகச் சிறப்பாக விளையாடினார். தொடர் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும்போது அவர் களமிறங்கினார். இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு இரண்டு நாள்கள் முன்புதான் தனது தந்தையை இழந்தார் பேன்ட். இருந்தாலும், அவர் சிறப்பானதொரு ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரின் மனவலிமையை இந்தச் செயல் பறைசாற்றுகிறது. அவர் கண்டிப்பாக இந்திய அணியில் விளையாடப் போகும் மிக முக்கியமான வீரராக இருப்பார்' என்று புகழ்ந்து தள்ளினார் டிராவிட்.

ஐபிஎல் 10-வது சீசனில் டெல்லி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குக்கூட தகுதி பெறாதது குறித்து பேசிய டிராவிட், 'ஐபிஎல் ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெற 8 போட்டிகளில் வென்றாக வேண்டும். ஆனால், நாங்கள் சென்ற முறை 7 போட்டிகளில்தான் வென்றோம். இம்முறை 6 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றோம். சில முக்கியமான போட்டிகளில் நாங்கள் தோற்றுவிட்டோம். அதுவே, எங்கள் தரப்பிலிருந்து மிகப்பெரிய பின்னடைவாக இருக்கிறது' என்று கூறினார்.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close