Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

#Eliminator1- 128 ரன்களுக்கு சுருண்டது ஹைதராபாத்!

கொல்கத்தா - ஹைதராபாத் அணிகளுக்கு இடையே பெங்களூருவில் நடந்துவரும் ஐபிஎல் 10-வது சீசனின் இரண்டாவது ப்ளே ஆஃப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த நடப்பு சாம்பியன் ஹைதராபாத், 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 128 ரன்களுக்கு சுருண்டது. கொல்கத்தா அணி சார்பில், நாதன் கூல்டர் நைல் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

போட்டிக்கான டாஸை வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் கௌதம் கம்பீர்,பௌலிங் செய்யத் தீர்மானித்து, ஹைதராபாத் அணியை பேட்டிங் ஆடச் சொல்லிப் பணித்தார். இதையடுத்து, அதிக ஸ்கோர் எடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கியது ஹைதராபாத். ஆனால், அணியின் கேப்டன் டேவிட் வார்னரைத் தவிர, வேறு எந்த பேட்ஸ்மேனும் 30 ரன் மார்க்கைக்கூட தாண்டாததால், அந்த அணியால் 20 ஓவர்கள் முடிவில் வெறும் 128 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 

இதையடுத்து, 129 ரன்கள் எடுத்தால் வெற்றிபெற்று இறுதிப் போட்டி நோக்கி நகர முடியும் என்ற எண்ணத்தில் இருந்தது கொல்கத்தா. ஆனால், தற்போது மைதானத்தில் மழை பெய்துவருவதால், ஆட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டி ரத்தாகும் பட்சத்தில், புள்ளிகள் பட்டியலில் முன்னணியில் இருக்கும் ஹைதராபாத் அணி அடுத்த சுற்றுக்கு நகரும்.

நேற்று முதல் ப்ளே ஆஃபில், மும்பை அணியை வீழ்த்தி, புனே அணி வெற்றிபெற்றதையடுத்து, இந்தப் போட்டியில் வெற்றிபெரும் அணி, மும்பை அணியுடன் மோதும். அதில் வெற்றிபெறும் அணியே ஐபிஎல் 10-வது சீசனின் இறுதிப் போட்டியில் புனேவைச் சந்திக்கும். 

நன்றி: IPL

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close