வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து வெற்றி!

New Zealand won by 4 wickets against Bangladesh cricket team

அயர்லாந்து - நியூசிலாந்து - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடரின் இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து - வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் ஜெயித்த நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லாதம், ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தார். 

நியூசிலாந்து

முதலில் விளையாடிய வங்கதேச அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் எடுத்தது. வங்கதேச அணியைச் சேர்ந்த செளமியா சர்கார் (61), முஷ்ஃபிகுர் ரஹீம் (55), மஹமதுல்லா (51) ஆகியோர் அரைசதம் அடித்தனர். நியூசிலாந்து அணியில், வேகப்பந்து வீச்சாளர் ஹமீஷ் பென்னட் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணி, 47.3 ஓவர்களில் 258 ரன்கள் என்ற இலக்கை எட்டிப்பிடித்தது. கேப்டன் டாம் லாதம் (54), நீசம் (52) ஆகியோர் அரைசதம் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினர். இந்த வெற்றியுடன் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் நீடிக்கிறது நியூசிலாந்து அணி.  இத்தொடரின் அடுத்த ஆட்டம் மே 19 அன்று அயர்லாந்து - வங்கதேசம் அணிகளுக்கு இடையே நடைபெறவிருக்கிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!