Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

#Eliminator1 தோல்விக்கு என்ன காரணம்... மனம் திறந்த ஹைதராபாத் பயிற்சியாளர் முரளிதரன்

முத்தையா முரளிதரன்

ஐபிஎல் 10-வது சீசனின் இரண்டாவது ப்ளே ஆஃப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஹைதராபாத், கொல்கத்தா அணியிடம் நேற்று மோசமாக தோல்வியடைந்தது. பெங்களூரில் நடந்த இந்தப் போட்டியில், வலுவான பேட்டிங் ஆர்டர் கொண்ட கொல்கத்தா அணியை எதிர்கொண்டது ஹைதராபாத்.

போட்டிக்கான டாஸை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் கம்பீர், மழை பெய்யும் என்று முன்பே கணித்திருந்ததால், பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்ய ஆரம்பித்தது ஹைதராபாத். பவர் ப்ளே முடிவில், 30 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் மட்டுமே இழந்து, ஹைதராபாத் அணிக்கு நல்ல தொடக்கத்துடனேயே போட்டி சென்று கொண்டிருந்தது. ஆனால், வழக்கமான பெங்களூரு மைதான பிட்ச் இல்லை என்று ஹைதராபாத் அணி பேட்ஸ்மேன்களுக்கு புரிய ஆரம்பித்தது. இதனால், 150 ரன் ஸ்கோரை நோக்கி அந்த அணி முன்னேறிக் கொண்டிருந்தது. கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் வில்லியம்சன் ஆகியோர் இடையில் 50 ரன்கள் பார்டனர்ஷிப்பால், 150 ரன் இலக்கை ஹைதராபாத் எட்டும் என்றே எண்ணப்பட்டது. ஆனால், மலமலவென விக்கெட்டுகள் விழுந்ததால், 20 ஓவர்கள் முடிவில் வெறும் 128 ரன்களுக்கு அந்த அணி சுருண்டது. இதையடுத்து, மழை குறுக்கிட்டது. பின்னர், 6 ஓவர்களுக்குப் போட்டி சுருக்கப்பட்டது. சுருக்கப்பட்ட போட்டியின் குறைந்த டார்கெட்டை கொல்கத்தா அணி எளிதாக எட்டியது. 

இந்நிலையில்தான் ஹைதராபாத் அணியின் பவுலிங் பயிற்சியாளரான முத்தையா முரளிதரன், தங்கள் அணியின் தோல்வி குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். 

அவர், 'வழக்கமாக விளையாடும் பெங்களூரு ஆடுகளம் நேற்று இல்லை. அடித்து ஆடுவது மிகவும் கடினமாக இருந்தது. நாங்கள் அதிரடி காட்ட முயன்றிருந்தால், 70-80 ரன்களுக்கே சுருண்டிருப்போம். நாங்கள் ஒரு கட்டத்தில் 140 ரன்கள் எடுத்தால் போதும் என்று நினைத்தோம். ஆனால், அவர்கள் நன்றாக பந்து வீசியதால் 128 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அவர்களும் 20 ஓவர்கள் பேட்டிங் செய்திருந்திருந்தால், கண்டிப்பாக வெற்றி அடைந்திருப்போம். ஆனால், மழை வந்தது மிகவும் துரதிர்ஷ்டமானது. ஆனால், அதை ஒரு காரணமாகச் சொல்ல முடியாது. எங்கள் அனைவருக்குமே அடுத்தப் போட்டிக்கு முன்னேற முடியவில்லை என்ற வருத்தம் இருக்கிறது. ஆனால், இந்த சீசனில் நாங்கள் விளையாடிய முறை பற்றி சந்தோஷப்படுகிறோம். எல்லா தடவையும் வெற்றி பெற முடியாதே' என்று தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக் கொண்டார் முரளிதரன்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close