இந்திய ஹாக்கி அணியின் புதிய கேப்டன் மன்பிரீத் சிங் | Manpreet Singh named as a captain for Indian hockey team

வெளியிடப்பட்ட நேரம்: 06:18 (19/05/2017)

கடைசி தொடர்பு:06:38 (19/05/2017)

இந்திய ஹாக்கி அணியின் புதிய கேப்டன் மன்பிரீத் சிங்

manpreet singh

இந்திய ஹாக்கி அணியின் கேப்டனாக முன்னணி வீரர் மன்பிரீத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். ஜெர்மனியில் நடைபெற இருக்கும் மூன்று நாடுகள் தொடர் மற்றும் இங்கிலாந்தில் நடைபெறும் உலக லீக் அரை இறுதி ஹாக்கி தொடர் ஆகியவை வரும் ஜூன் மாதத்தில் தொடங்குகின்றன. இதில் பங்கேற்று விளையாடவிருக்கும் இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஸ்ரீஜேஷ் காயம் காரணமாக இத்தொடர்களில் பங்கேற்கவில்லை என அறிவிக்கப்பட்டது. அவருக்குப் பதிலாக இந்திய ஹாக்கி அணியின் நட்சத்திர வீரரான மன்பிரீத் சிங் புதிய கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிங்லென்சானா சிங் கங்குஜம் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

நேற்று அறிவிக்கப்பட்டுள்ள இந்திய ஹாக்கி அணியின் விவரம் பின்வருமாறு: மன்பிரீத் சிங் (கேப்டன்), சிங்லென்சானா சிங் கங்குஜம் (துணை கேப்டன்), ஆகாஷ் சிக்தே, விகாஷ் தஹியா, பர்தீப் மோர், கொதாஜித் சிங், சுரேந்தர் குமார், ரூபிந்தர்பால் சிங், ஹர்மன்பிரீத் சிங், உத்தப்பா, சத்பிர் சிங், சர்தார் சிங், ஹர்ஜீத் சிங், ராமன்தீப் சிங், தல்விந்தர் சிங், மன்தீப் சிங், ஆகாஷ்தீப் சிங்.