Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐபிஎல் #MIvsKKR : இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது மும்பை இந்தியன்ஸ்!

ஐபிஎல் பத்தாவது சீஸனில், இன்று நடைபெற்ற இரண்டாவது குவாலிஃபையர் போட்டியில் மும்பை, கொல்கத்தா அணிகள் மோதின. பெங்களூரில் நடந்த இந்தப் போட்டியில், டாஸ் வென்ற மும்பை அணி, பௌலிங்கை தேர்வுசெய்தது. 

மும்பை இந்தியன்ஸ்

முதலில் பேட் செய்த கொல்கத்தா, ஆரம்பம் முதலே தடுமாறியது. கம்பீருக்கு பதிலாக, க்றிஸ் லின் ஓப்பனிங் இறங்கினார். ஆனால், அந்த மாற்றம் கொல்கத்தா அணிக்குக் கைகொடுக்கவில்லை. க்றிஸ் லின் நான்கு ரன்களில் அவுட் ஆனார். அந்த அணியில் அதிகபட்சமாக, சூர்யகுமார் யாதவ் 31 ரன்களும், ஜக்கி 28 ரன்களும் எடுத்தனர். இதனால், அந்த அணி 18.5 ஓவர்களில் 107 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மும்பை அணியில் கரண் சர்மா 4, பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

இதையடுத்து, 108 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. கேப்டன் ரோஹித் ஷர்மா 26 ரன்களும், க்ருனல் பாண்டியா 45 ரன்களும் எடுத்தனர். மும்பை அணி 14.3 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து, இலக்கை எட்டி வெற்றிபெற்றது. கொல்கத்தா அணி தரப்பில் பியூஷ் சாவ்லா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்குக் காரணமாக இருந்த கரண் ஷர்மா, ஆட்டநாயகன் விருதுபெற்றார். இந்த வெற்றியின்மூலம் மும்பை அணி இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது. ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத்தில் நடக்கவிருக்கும் இறுதிப்போட்டியில், புனே அணியும் மும்பை அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்ற வருடம் புதிதாக ஐபிஎல்-லில் சேர்க்கப்பட்ட புனே அணியும் ஏற்கெனவே இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணியும் மோதுவது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement