ஐபிஎல் இறுதிப்போட்டி: பேட் பிடிக்கிறது மும்பை

ipl

ஐபிஎல் டி20 இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி புனே சூப்பர் ஜெயன்ட் அணியை எதிர்கொள்கிறது. ஹைதராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் போட்டி நடக்கிறது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. தொடர்ந்து புனே சூப்பர் ஜெயன்ட் அணி பந்து வீச உள்ளது. மூன்றாவது முறை ஐபிஎல் கோப்பையை வெல்ல முனைப்புடன் களம் இறங்குகிறது மும்பை அணி. போன ஐபிஎல்லில் தொடர் தோல்விகளைச் சந்தித்த புனே, முதன்முறையாக ஐபிஎல் இறுதிப்போட்டியில் களமிறங்கியுள்ளது. கேப்டன் ஸ்மித் தலைமையில் தோனி உட்பட வீரர்கள் களம் காண்கின்றனர். புனே அணி சார்பில் உனட்கட், தாகூர், ஜம்பா ஆகியோர் பந்துவீச்சு தாக்குதலில் ஈடுபட உள்ளனர். மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சிம்மன்ஸ், பார்த்திவ் படேல் விளையாடுகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!