ஐபிஎல்: புனே அணிக்கு 130 ரன்கள் இலக்கு!

pune

ஐபிஎல் டி20 இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி புனே சூப்பர் ஜெயன்ட் அணியை எதிர்த்து விளையாடி வருகிறது. ஹைதராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் இப்போட்டி நடக்கிறது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. ஆரம்பம் முதலே சொதப்பலான ஆட்டத்தை வெளிப்பிடுத்தி வந்தது மும்பை. 8 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. புனே பந்துவீச்சாளர்கள் மிரட்டி வந்தனர். 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு மும்பை அணி 129 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக க்ருனல் பாண்டியா 38 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். புனே சார்பில் உனட்கட், ஜம்பா, கிறிஸ்டியன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பையைத் திணறடித்தனர். 130 ரன்கள் இலக்குடன் புனே களமிறங்குகிறது. முதல் ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றிவிடும் முனைப்பில் களம் இறங்கும் புனே சமீபத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

PIC Courtesy: BCCI

Do you like the story?

Please Appreciate the Author by clapping!