வெளியிடப்பட்ட நேரம்: 07:43 (22/05/2017)

கடைசி தொடர்பு:14:02 (22/05/2017)

மும்பை வெற்றிபெற்றவுடன், சென்னை சூப்பர் கிங்ஸ் சொன்னது இதுதான்..!

ஐபிஎல் தொடரில், மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது, மும்பை அணி. இதற்கிடையே, மும்பை அணியின் பரம எதிரியான சென்னை சூப்பர் கிங்ஸ், இரண்டாண்டு தடைக்குப் பின் அடுத்த சீசனில் களமிறங்க உள்ளது. நடந்து முடிந்த சீசனிலேயே, பரபரப்பாகப் பேசப்பட்ட செய்தி, சி.எஸ்.கே-யின் ரீஎன்ட்ரி குறித்துதான்.

CSK


இந்த நிலையில், நேற்று ஃபைனல் மேட்ச், தொடங்குவதற்கு முன்பே சி.எஸ்.கே மற்றும் தோனி ரசிகர்கள் சென்னையின் ரீ என்ட்ரி குறித்து மீம்ஸ்களையும் போஸ்ட்களையும் போட்டு சமூக வலைதளங்களை ஆக்கிரமித்தனர்.

 

 

 

இதையடுத்து, ஃபைனலில் மும்பை அணி வெற்றிபெற்றவுடன், சி.எஸ்.கே தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


ஃபைனலில் வெற்றிபெற்றதற்காக, மும்பை அணிக்கு வாழ்த்து தெரிவித்து முதல் ட்வீட் போடப்பட்டது. அடுத்து, புனே அணிக்கும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அடுத்த சீசனில் சி.எஸ்.கே-யின்  ரீ என்ட்ரி குறித்த ட்வீட்கள் வரத் தொடங்கின. 

 


"லயன்ஸ், விசில் போட ரெடியா? இந்தமுறை இன்னும் சத்தமாக, விசில் போட வேண்டும்.  எங்களது அற்புதமான சொந்த மண் (சென்னை சேப்பாக்கம் மைதானம்), அடுத்த ஆண்டு முதல் மீண்டும் வந்துவிடும். அடுத்த சீசனில் நாங்கள் இருப்போம்" என்று வரிசையாக ட்வீட்களைத் தட்டியது. 

 


குறிப்பாக, ஒவ்வொரு ட்வீட்க்கும் #ManyHappyReturnsOfCSK என்ற ஹேஷ் டேகை இணைத்து ஸ்டேட்டஸ் தட்ட, மும்பை இந்தியன்ஸ் வெற்றியைத் தாண்டி, #ManyHappyReturnsOfCSK என்ற ஹேஷ் டேக் ட்ரெண்டானது. மேலும், இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் ஜெய் போன்ற சி.எஸ்.கே-யின் சினி ரசிகர்களும், சென்னை அணியின் ரீ என்ட்ரி குறித்து ட்வீட்டினர்.